கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழிற்நுட்பக் கல்லூரியின் நான்காவது பட்டமளிப்பு விழா

கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழிற்நுட்பக் கல்லூரியில் நான்காவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் இன்று நடைப்பெற்றது. இவ்விழாவில் கல்லூரியில் படித்து 542  மாணவர்கள் பட்டம் பெற்றனர். பல்கலைகழக அளவில் கல்லூரியில் அதிக மதிப்பெண் பெற்று பல்கலைகழக தரவரிசையில் 8 பேர் தகுதி பெற்றிருந்தனர். அதில் இளங்கலையில் 4 மாணவர்களும், முதுகலையில் 4 மாணவர்களும் தகுதி பெற்றிருந்தனர். மாணவர்களுக்கு கல்லூரி சார்பில் பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. 

இந்த பட்டமளிப்பு விழாவிற்கு கல்லூரியின் தலைவர் கே.பி.ராமசாமி தலைமை தாங்கி உரையாற்றினார். கல்லூரியின் முதல்வர் கே.பொம்மண்ணராஜா முன்னிலை வகித்தார். அவரது உரையில் கல்லூரியின் கடந்தகால சாதனைகளையும் கல்லூரி மேற்கொள்ளும் புதிய முயற்ச்சியிகள் பற்றியும் விவரித்தார் குறிப்பாக IPR எனப்படும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமைக்கு விண்ணப்பித்ததில் IPR  என்ற மத்திய அரசின் அமைப்பில் தகவல்படி நம் கல்லூரி ஏழாம் இடத்தில் உள்ளது என்று குறிப்பிட்டார். கற்றல் கற்ப்பிதல் முறையில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்தியுள்ளது என்றார்.

      

பின்னர், அண்ணா பல்கலைகழகத்தின் நானோ சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி துறையின் இயக்குனர் மற்றும் பேராசிரியர் ஆர்.ஜெயவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா சிறப்புரையாற்றினார் அப்போது அவர் பேசுகையில், நான்கு ஆண்டுகளில் கஷ்டபட்டு படித்து இன்று பட்டம் பெறும் மாணவர்கள் வேலைபெறுவதிலும் சமுதாயத்திலும் பல்வேறு சாவல்களை சந்திக்க வேண்டி இருக்கும் என்றும் சவால்களுக்கும் அதிகமான அளவில் வாய்ப்புகள் இருக்கிறது என்றும் அந்த வாய்ப்புகளை கண்டுபிடித்து பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார். அதேபோல் மத்திய அரசின் மேக் இன் இந்தியா டிஜிட்டல் இந்தியா போன்ற மத்திய அரசின் புதிய திட்டங்களில் பங்கேற்பதன் மூலம் நீங்கள் வளர்ச்சி பெறுவதோடு நாட்டின் வளர்ச்சியிலும் பங்கு பெற முடியும் என்றார்.

சிறப்பு விருந்தினர்களாக இன்போசிஸ் நிறுவனத்தின் சென்னை கிளையின் மனிதவள தவைவர் மற்றும் நேஷனல் எச்.ஆர்.டி நெட்வெர்க் சென்னை நிறுவனத்தின் தலைவருமான சுஜித்குமார் கலந்து கொண்டு கருத்துரை ஆற்றினார். அவரது உரையில் முன்னர் UPSC தேர்வில் கலைப்பாடபிரிவுகளில் படித்தவர்களே அதிகம் தேர்ச்சி பெற்றனர் என்றும் தற்போது சுமார் 65 சதவீதம்வரை பொறியியல் படித்தவர்களே தேர்ச்சி பெறுகிறார்கள் என்றும் குறிப்பிட்டார். தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக ஒவ்வொரு துறையிலும் புதுப்புது விசயங்கள் உள்ள புதியவற்றை கற்றுக்கொண்டே இருப்பது அவசியம் என்றார். வேலையில் சேரும் அணைவரும் பணம் சம்பாதிக்க வேலைக்கு செல்லாமல் மனதிற்கு பிடித்த வேலையை தேர்வு செய்து முழு ஈடுபாட்டுடன் பணியாற்றுவதன் மூலம் வெற்றி பெறமுடியும் என்றார்.

மற்றொரு சிறப்பு விருந்தினர் நந்தகுமார் உரையாற்றும் போது மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து பிறந்து பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தி பின் தொடர்ந்த என்னால் UPSC  தேர்வில் தேர்ச்சி பெற முடிகிறது என்றால் என்னைவிட நிச்சயம் உயர்ந்த நிலையில் இருக்கும் உங்களால் மிகவும் உயர்வான இடத்தை அடைய முடியும் என்றார். இந்த வருடம் சிவில் சர்வீஸ் தேர்வில் கண்பார்வை இல்லாத ஒரு மாணவி தேர்ச்சி பெற்றுள்ளார். அதற்கு குறிக்கோளும் விடாமுயற்ச்சியும் முக்கியம் எனவே முயன்றால் நிச்சியம் நீங்களும் தேர்வுபெற முடியும் என்றார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...