கோவை மாநகராட்சியில் 360 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல், ரூ.73,950 அபராதம்

கோவை மாநகராட்சியில் மே மாதம் 1-ம் தேதி முதல் 50 மைக்ரான் அளவு தடிமனுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் தடைசெய்யப்பட்டதைத் தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் கடந்த 01.07.2017 முதல் 07.07.2017 வரை 5 மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 865 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் மொத்தம் 360 கிலோ அளவிலான தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இன்று (07.07.2017) பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் ரூ.73,950 விதிக்கப்பட்டது.

இதுகுறித்து, கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவிக்கையில், “பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதி 2016 அறிவிப்பின்படி மாநகராட்சியின் சுற்றுபுறசூழலைக் கருத்தில் கொண்டு மாநகராட்சியின் அழகினை பராமரிக்கவும், பாதுகாக்கவும், 50 மைக்ரான் அளவு தடிமனுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் கேரிபேக், பிளாஸ்டிக் பூசப்பட்ட தட்டுகள், பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், உணவகங்களில் பயன்படுத்தப்படும் உணவு தட்டுகள் ஆகியவைகளை கோவை மாநகராட்சிப் பகுதியில் உற்பத்தி செய்யவும், உபயோகிக்கவும், விற்பனை செய்யவும், கையிருப்புகள் வைத்திருக்கவும் 2017 மே மாதம் 1-ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது.

மேலும், அவற்றை கையிருப்பு வைத்திருப்பவர்களுக்கும், உபயோகிப்பாளர்களுக்கும், விற்பனை செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, கடந்த 01.07.2017 முதல் இன்று 07.07.2017 வரை கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களில் ஆய்வு மேற்கொண்டதில் மொத்தம் 865 கடைகளில் 360 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களும் இன்று பறிமுதல் செய்யப்பட்டு, அபராதத் தொகையாக ரூ.73,950 விதிக்கப்பட்டது.

மேலும், இந்த ஆய்வுப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ள அனைத்து மண்டல உதவி ஆணையர்கள், சுகாதார அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள், வணிக சங்கங்கள், வியாபாரிகள், கடை உரிமையாளர்கள், சிறு மற்றும் பெரு வியாபாரிகள் மாநகராட்சியின் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் கேட்டுக்கொண்டார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் ரூ.241 கோடி வளர்ச்சித் திட்டப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆய்வு

கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி.ப.ராஜ்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா ஆகியோர் வடக்கு மற்றும்...

அமராவதி அணையில் நீர்மட்டம் 45.8 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 32.95 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 8ஆம் தேதி நிலவரப்படி 45.8 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: தொடர் நீர் வெளியேற்றம்

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஆழி...

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...