டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள், விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ள கோவை மாநகராட்சி ஆணையர் உத்தரவு

கோவை மாநகராட்சியில், மழைகாலம் துவங்கி விட்ட காரணத்தினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் தடுப்புப் பணிகள் மண்டல வாரியாக தீவிர கண்காணிப்புடன் சிறப்பு கவனம் செலுத்த மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் நீர்தேக்க தொட்டிகளில் அபேட் மருந்து ஊற்றுதல், தேவையற்ற பொருட்களை அகற்றுதல் (தேவையற்ற பழைய டயர்கள், உபயோகமற்ற மண் பாண்டங்கள், குடங்கள், ஆட்டுக்கல், தேங்காய் ஓடுகள், பிளாஸ்டிக் கப்புகள்) ஆகியவற்றை உடனடியாக அப்புறப்படுத்தவும், வீட்டை சுற்றியும், மாடியிலும் போட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. வீடுகளில் உள்ள பிரிஜ், அழகுக்காக வளர்க்கப்படும் பூந்தொட்டிச் செடிகள் ஆகியவற்றில் உள்ள தண்ணீரினால் கொசுப்புழுக்கள் உற்பத்தியாக வாய்ப்புகள் உள்ளது. 

எனவே, அவற்றை அவ்வப்போது தேவைக்கேற்ப தூய்மை செய்ய அல்லது குறைந்தபட்சம் வாரம் ஒருமுறை தூய்மை செய்ய அறிவுறுத்தப்படுகிறது. மேலும், வீடு வீடாக சென்று புகை மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. காய்ச்சல் பாதித்த பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், குடிதண்ணீரில் குளோரின் அளவு சரியாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும் மாநகர பொறியாளருக்கு அறிவுறுத்தப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக இன்று மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி தெற்கு மண்டலம், வார்டு-97, பிள்ளையார்புரம் பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் டெங்கு தடுப்பு நடவடிக்கைள் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் குறித்து எடுத்துரைத்தார். 

மாநகராட்சியில் பணிபுரியும் 65 கொசு ஒழிப்பு பணியாளர்கள், கிருஷ்ணா கல்லூரி அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் 100 பேர், கொசு ஒழிப்பு பணிகள், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்குதல் ஆகியவற்றில் ஈடுபட்டனர். துண்டு பிரசுரங்கள் ஏறத்தாழ 1000 வீடுகளுக்கு மேல் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து டெங்கு தடுப்பு நடவடிக்கைகள், விழிப்புணர்வு பிரச்சாரங்கள் கோவை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் கல்லூரி மாணவர்களை ஈடுபடுத்தி தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

துணை ஆணையர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், தெற்கு மண்டல உதவி ஆணையாளர் ரவி, மாநகராட்சி அலுவலர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் கிருஷ்ணா கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...