கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களின் குடும்பத்திற்கு அரசு உதவி செய்யக்கூடாது- ராஷ்ட்ரீய ஹிந்து பரிஷத்


கோவையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களின் குடும்பத்திற்கு அரசு எவ்வித உதவியும் செய்யக்கூடாது என்று கோரி ராஷ்ட்ரீய ஹிந்து பரிஷத் அமைப்பினர் இன்று கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் கோவை மாநகர காவல் ஆணையர் ஆகியோரிடம் மனு அளித்தனர்.

இது குறித்து ராஷ்ட்ரீய ஹிந்து பரிஷத் அமைப்பின் நிறுவனர் ஜலேந்தரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது :-

கோவையில் கடந்த 1997-ம் ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் 60-க்கும் மேற்ப்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். ஆனால், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இதுநாள் வரையில் அரசு எவ்வித நிவாரண நிதியும் வழங்கவில்லை. இந்த நிலையில், குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய நபர் ஒருவர் உடல் நலக்குறைவால் சிறையிலேயே உயிரிழந்தார். ஆனால், கோவை மாநகராட்சி சார்பில் அந்த நபரின் குடும்பத்திற்கு உக்கடம் பகுதியில் தொழில் துவங்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.

குண்டுவெடிப்பில் பலியானோர் குடும்பத்திற்கு எந்த நிவாரணமும் வழங்காத அரசு, குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களின் குடும்பத்திற்கும் எவ்வித நிவாரணமும் வழங்க கூடாது'. 

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...