உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் டிரான்ஸ்பார்மரை அகற்றவேண்டும்: மாவட்ட ஆட்சியரிடம் தமிழ் புலிகள் கட்சியினர் புகார்


கோவை குனியமுத்தூரை அடுத்த பி.கே. புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கு சொந்தமான இடத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் மின்சாரவாரியத்தின் சார்பில் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. தொடர்ந்து, கடந்த ஒரு ஆண்டுக்கு முன் டிரான்ஸ்பார்மர் அருகிலேயே ஆறுமுகம் வீடுகட்டினார். தற்போது, மழைக்காலம் என்பதால், அவ்வழியாக நடந்து சென்றாலே மின்சாரம் தாக்குவதாக கூறப்படுகிறது.



இந்நிலையில், மின்சார வாரியத்திடம் தொடர்பு கொண்டு புகார் அளித்தும் எவ்வித பயனும் இல்லை என்பதால், ஆறுமுகம் தமிழ் புலிகள் கட்சியினரோடு இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார். மேலும், மாவட்ட ஆட்சியர் இந்த பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு டிரான்ஸ்பார்மரை விரைவில் இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.



Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...