கோவை மாவட்டம் பொள்ளாச்சி -அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை, பரம்பிக்குளம்- ஆழியாறு திட்டத்தின் கீழ் முக்கிய அணையாக உள்ளது. இந்த அணையில், சேகரிக்கப்படும் தண்ணீர், பழைய ஆயக்கட்டு, புதிய ஆயக்கட்டு, கேரள நீர் பாசனத்திற்கும் வழங்கப்படுகிறது. இது தவிர, குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதனிடையே, கடந்தாண்டு பருவமழை கரிவர பொழியாத நிலையில் கோவை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் அமைந்துள்ள பெரும்பாலான அணைகள் வறண்டன. 

இந்நிலையில், தற்போது தென்மேற்கு பருவமழை பெய்யத் துவங்கியுள்ள நிலையில் ஆழியாறு அணை, சோலையார் அணை, பரம்பிக்குளம் உள்ளிட்ட அணைகளுக்கு அதிகப்படியான நீர்வரத்து வர துவங்கியுள்ளது.

அணைகளில் நீர்மட்டம் விபரம்:-

சோலையார் அணையின் நீர்மட்டம் 87.77/160 அடி. தற்போது, 710.30 கன அடி நீர்வரத்து உள்ளது. 359.26 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சோலையாறு அணை நிர் பிடிப்பு பகுதியில் 9 மி.மீ மழை அளவு உள்ளது.

பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் 9.10/72 அடி ஆகும். தற்போது, 144 கன அடி நீர்வரத்து உள்ளது. அணையில் இருந்து 3 கன அடி நிர் வெளியேற்றப்படுகிறது. இதன் நீர்பிடிப்பு பகுதியில் 13 மி.மீ மழை அளவு உள்ளது. 

69.70/120 அடி நீர்மட்டம் கொண்ட ஆழியார் அணைக்கு தற்போது, 37 கன அடி நீர்வரத்து உள்ளது. இங்கிருந்து 151 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

திருப்பூர் மாவட்டம்- உடுமலை அணைகளின் நிலவரம்

திருமூர்த்தி அணையின் மொத்த நீர்மட்டம் 14.52/60 அடி ஆகும். இங்கிருந்து தற்போது, 26 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

அமராவதி அணையின் மொத்த நீர்மட்டம் 44.29/90 அடி ஆகும். இங்கு நீர்வரத்து 218 கன அடி ஆக உள்ளது. அமராவதி அணையில் இருந்து 9 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

கோவை மாவட்டம், வால்பாறையில் தற்போது தென்மேற்கு பருவமழை துவக்கமாக 19 மில்லி மீட்டர் மழை பெய்து வருகிறது. வால்பாறைக்கு உட்பட்ட அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் மழை விபரம் பின்வருமாறு:-

அப்பர் நீராறு - 8 மில்லி மீட்டர், லோயர் நீராறு - 20 மில்லி மீட்டர், மணக்கடவு - 2 மில்லி மீட்டர், தூணக்கடவு - 5 மில்லி மீட்டர், பெருவாரிபள்ளம் - 7 மில்லி மீட்டர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...