சௌரிபாளையம் பகுதியில் டாஸ்மாக் கடை அகற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டோர் கைது

சௌரிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் 4 டாஸ்மாக் கடைகளை அகற்ற வலியுறுத்தி இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாவட்டம், சௌரிபாளையம் பகுதியில் உள்ள கருணாநிதி நகர், தேர்வீதி, கல்லறைவீதி,  ஜி.வி. ரெசிடென்சி என ஒரே பகுதியில் அருகருகே 4 டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு மது குடிக்க வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருவதாகக் கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து, மேற்குறிப்பிட்ட பகுதியில் செயல்பட்டு வரும் மதுக்கடைகளை அகற்றக்கோரி இன்று கருப்பு கொடிகளுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 24 மணி நேரமும் அக்கடைகளில் மதுவிற்பனை நடைபெற்று வருகிறது என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

மேலும், கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் போராட்டம் நடத்திய போது டாஸ்மாக் கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமென அதிகாரிகள் உத்திரவாதம் அளித்த நிலையிலும், இன்றுவரை டாஸ்மாக் கடைகளை அகற்றவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...