தேயிலை தொழிலாளர்களுக்கு தினசரி கூலி உயர்த்த தமிழ்நாடு அரசு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்

வால்பாறை தேயிலை தொழிலாளர்கள் சில தொழிற் சங்கங்களால் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். கேரளா மாநிலத்தில் தேயிலை தொழிலாளர்களுக்கு தினசரி கூலியாக ரூபாய் 500 வரை கேரளா அரசு வழங்கி வருகிறது. ஆனால், தமிழ்நாடு அரசு தேர்தல் நேரத்தில் எம்.எல்.ஏ, எம்.பிக்கள் தேயிலை தொழிலாளர்களுக்கு தினசரி கூலி உயர்த்தி தருவதாகக் கூறி வாக்குறுதி அளித்தனர். அதனை பெரிதும் நம்பிய அவர்கள் வயிற்று பிழைப்புக்காக கடும் மழையிலும், பனியிலும், யானை, சிறுத்தை, புலி போன்ற காட்டு மிருகங்களின் தொல்லையிலும் அடிமை போல் வாழ்க்கை வாழும் அவலம் நிலையில் தள்ளப்பட்டுள்ளனர்.



இதனை தொடர்ந்து, வால்பாறை தேயிலை தொழிலாளர்கள் சில தொழிற் சங்கங்களால் நிர்வாகத்துடன் மூன்று கட்ட பேச்சு வார்த்தை நடத்தியும் தோல்வி அடைந்தது. எனவே, தேயிலை தொழிலாளர்களுக்கு உரிய சம்பள வழங்கக்கோரி நிர்வாகத்துடன் தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் எடப்பாடி தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தி இதற்கு தீர்வு காண வேண்டும் என தேயிலை தொழிலாளர்களின் எதிர்பார்பாக உள்ளது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...