கோவை மாநகராட்சியில் 2.63 ஏக்கர் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்கள் மீட்கப்பட்டுள்ளது- மாநகராட்சி ஆணையர்

கோவை மாநகராட்சியில் 4 மண்டலங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்கள் 2.63 ஏக்கர் மீட்க்கப்பட்டு அறிவிப்புப்பலகை வைக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அமையும் அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளில் ஏற்கனவே உள்ள ஆவணங்கள் மற்றும் வரைபடங்களின்படி, பொறியாளர்கள் உரிமம் பெற்ற கட்டிட பட வரைவாளர்கள், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தெரியும் வகையில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதைத் தவிர, ஏற்கனவே மாநகராட்சியில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளில் புதிதாக இணைக்கப்பட்ட (நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி;) பகுதிகளுக்கும் அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவு விபரங்கள் மற்றும் வரைபடங்கள் சேர்த்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதைத் தவிர, அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளில் உள்ள சாலைகள், பொது ஒதுக்கீடு மனைகளில் நிரந்தர ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டு, அதனடிப்படையில் கிடைக்கப்பெறும் ஆவணங்களையும் கொண்டு உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் ஆக்கிரமிப்புகள் குறித்து உள்ள வழக்குகளையும் பின்பற்றப்பட்டு வருகிறது.

மேற்கண்ட பணிகள் நகரமைப்பு பிரிவு மூலம் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதைத் தவிர, அவ்வப்போது பெறப்படும் புகார் மனுக்கள், தொலைபேசி மற்றும் அலைபேசி குறுந்தகவல் மூலம் பெறப்படும் புகார்களையும் இடம் கண்டறியப்பட்டும், கட்டிட அனுமதிக்கு விண்ணப்பிக்கும் வரைபடங்களுடன் சமர்பிக்கும் அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவு வரைபடங்கள் புதிதாக கவனத்திற்கு வரும் வரைபடங்களையும் உடனடியாக ஆய்வு செய்து, மேற்படி மனைப்பிரிவுகளில் அமையும் பொது ஒதுக்கீடு மனைகளில் நிரந்தர மற்றும் தற்காலிகமாக உள்ள ஆக்கிரமிப்புகள், உபயோகப்படுத்த முடியாத நிலையில் முட்புதர்கள் இருப்பின், அதனையும் ஆய்வு செய்து பிரதிவாரமும் அந்தந்த ஆக்கிரமிப்புகளின் தன்மைக்கு தகுந்தவாறு மாநகராட்சியால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது.

இவ்வாறு பணிகளை மேற்கொள்ளும் போது உபயோகமற்ற நிலையில் இருக்கும் பொது ஒதுக்கீடு மனைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு உடனடியாக கிடைக்கறது. மேலும் ஆய்வின் போது திறவிடங்களாக இருக்கும் ஒரு சில பொது ஒதுக்கீடு மனைகள் தனியாளர்களால் பொதுமக்களுக்கு விற்கப்பட்ட மனைகளும் கண்டறியப்பட்டு மாநகராட்சியால் சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் 24-ம் தேதியன்று கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட காளப்பட்டி கிராமம், வார்டு எண். 36-யில் 50 சென்ட் பரப்பளவும், மேற்கு மண்டலத்திற்குட்பட்ட, வீரகேரளம், வார்டு எண். 18-யில் 40 சென்ட் பரப்பும் மற்றும் வார்டு எண். 19, அண்ணாநகர் குடியிருப்புப் பகுதியில் 80.53 சென்ட் பரப்பும், வடக்கு மண்டலத்திற்குட்பட்ட சரவணம்பட்டி, வார்டு எண். 28-யில் 52 சென்ட் பரப்பும் மற்றும் தெற்கு மண்டலத்திற்குட்பட்ட குனியமுத்தூர் கிராமம், வார்டு எண்.93, ஸ்ரீ ராம் காலனி பகுதியில் உள்ள 40 சென்ட் பரப்பும் என மொத்தம் 2.63 ஏக்கர் பரப்பளவிலான பூங்கா ஒதுக்கீட்டு பகுதியில் சுத்தம் செய்து, பெயர் பலகை அமைக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளில் அமையும் பொது ஒதுக்கீடு சம்பந்தமாக ஆணையர் அவர்களின் உத்தரவின் அடிப்படையில் நகரமைப்பு பிரிவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆக்கிரமிக்கப்பட்ட மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் மீது தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...