கோவை விமான நிலையத்திற்கும் KMCH மருத்துவமனைக்கும் இடையே நடைபெற்ற அவசர விபத்து சிகிச்சை ஒத்திகை பயிற்சி.

மாநில நிர்வாகம், KMCH மருத்துவமனை, காவல் துறை, தீயணைப்பு துறை மற்றும் விமான இயக்கங்களுடன் சம்மந்தப்பட்ட மற்ற துறைகளும் இணைந்து கடந்த அவசர உதவி ஒத்திகை பயிற்சியை கோவை சர்வதேச விமான நிலையத்தில நடத்தின.

விமானத்துறை டைரக்டர் ஜெனரல் விதிகளின்படி உரிமம் பெற்ற அனைத்து விமான நிலையங்களும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை முழு அளவிலான அவசர நிலை ஒத்திகை பயிற்சியை நடத்தவேண்டும். ஒரு விமானத்துக்கு விபத்து நேர்ந்தால் அதனால் ஏற்படும் அவசர நிலையை எதிர்கொள்ள ஊழியர்கள் எவ்வளவு ஆயத்தமாக இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்து கொள்ள தயாராக இருப்பதின் ஒரு பகுதியே இந்த ஒத்திகை பயிற்சி.

அவசர காலத்தில் ஒரு விமானத்தை தரை இறக்குவது போன்ற சூழ் நிலையை உருவாக்க விமான நிலைய ஆணையத்தால் வேண்டிய ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டிருந்தன. இந்த ஒத்திகை பயிற்சியானது அவசர கால நடவடிக்கை குழுவின் திறமையை பரிசோதிக்க KMCH மருத்துவமனையும் கோவை சர்வதேச விமான நிலையமும் சேர்ந்து நடத்தியது. போலியான அவசர நிலையை உருவாக்கி அதை எப்படி கையாள வேண்டும் (அதாவது Mayday call என்று விமான நிலையத்திலும் Disaster Code Yellow call என்று மருத்துவமனைக்கும்) என்பதற்கு ஒரு திட்டம் தயாரித்து அதன்படி நடத்தப்பட்ட அந்த ஒத்திகை பயிற்சியில் 75 மாணவ மாணவியர்கள் விபத்தில் சிக்கியது போலவும், விமான இயக்க குழுவின் உறுப்பினர்கள், தீயணைப்பு துறையினர், KMCH மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவ ஊழியர்கள் மற்றும் காவல் துறையினர் என 200-கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பாதிக்கப்பட்டவர்களை மருத்துவ உதவிக்கு அனுப்புவது போலவும் நடித்து அவர்களுடைய திறமையை நிருபித்தனர்.

ஒரு விமானம் நொறுங்கி விழுந்த தகவல் -அதாவது Mayday Call கிடைத்தவுடன் இரண்டு நிமிடங்களில் தீயணைப்பு வண்டிகள், 10 ஆம்புலன்ஸ் வண்டிகள் ஒன்றின் பின் ஒன்றாக விபத்து நடந்த இடத்தை விரைந்து சென்றடைந்தனர். காயம் அடைந்த பயணிகளை மருத்துவமனைக்கு விரைந்து அழைத்து செல்வது போல் நிஜமாக நம்பும்படி ஒரு சூழல் உருவாக்கப்பட்டது.

காயம் அடைந்த பயணிகள் மூன்று பிரிவினராக வகைப்படுத்தப்பட்டனர். தலையில் படுகாயம், ரத்தநாளம் அறுபடுதல், கை/கால் முறிவு மற்றும் தீக்காயம் 40% -இவை உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துபவை ஆகவே KMCH மருத்துவமனை மற்றும் துணை மருத்துவ ஊழியர்கள் காயம் அடைந்த பயணிகளை 10 நிமிடத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இரண்டாவது வகையில் பெரும் எலும்பு முறிவுகள், தீக்காயங்கள்( 20-30%) கொண்ட அந்த பயணிகளை பின்னர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். சாதாரண காயம் மற்றும் சிராய்ப்பு ஏற்பட்ட மூன்றாவது பிரிவினருக்கு விமான நிலையத்தில் உள்ள முதலுதவி மையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டது. 

இது குறித்து, கோவை சர்வதேச விமான நிலையத்தின் இயக்குனர் மஹாலிங்கம் கூறுகையில்;

உண்மையிலேயே இப்படி ஒரு நெருக்கடி ஏற்பட்டால் நாங்கள் எவ்வாறு செயல்படுவோம், எந்த அளவுக்கு தயாராக இருப்போம் என்பதை தெரிந்து கொள்ளவே அந்த முழு அளவு அவசர நிலை ஒத்திகை பயிற்சியை நடத்தினோம். விமான பயணிகளின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் நலன்களுக்கு நாங்கள் எங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறோம் மற்றும் உலக தரத்துக்கு இணையாக எங்கள் பாதுகாப்பு முறைகளை மேம்படுத்திக் கொள்வதற்கு நாங்கள் இடைவிடாது முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம் என்றும் அவர் கூறினார். 

இந்த ஒத்திகை பயிற்சியில் Spicejet ஏர்வேஸ், சுங்கத்துறையினர், குடியேற்ற துறையினர் (immigration), கோவை காவல் துறை, தீயணைப்பு துறை, KMCH மருத்துவமனை மற்றும் விமான நிலைய பாதுகாப்பு படையினர் கலந்து கொண்டனர். இது போன்ற ஒத்திகை பயிற்சியில் எங்கள் ஊழியர்கள்களுக்கு தங்கள் திறமையையும் தொழில்நுட்ப யுக்திகளையும் மற்றும் உணர்வுகளை சமன்படுத்தவும் ஒரு நல்ல வாய்ப்பை கொடுத்துள்ளது என்று KMCH மருத்துவமனையின் துணை தலைவர் டாக்டர் தவமணி பழனிசாமி கூறினார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...