குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு மத்திய அரசு கடுமையான சட்டம் கொண்டுவர வேண்டும் - சமூக ஆர்வலர் திருமுருகன்

இந்தியாவில் குழந்தை பாலியல் வன்கொடுமை அதிக அளவில் நடைபெறுவதை தடுக்கும் வகையில் நோபல் பவுண்டேசன் மூலமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்க்கு இதன் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் 11 நாட்களாக தமிழ்நாட்டில் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று குழந்தை பாலியல் வன்கொடுமை விழிப்புணர்வு முகாமை பல்மருத்துவர் மற்றும் சமூக ஆர்வலர் திருமுருகன் ஏற்படுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக கோவையில் இன்று குழந்தை பாலியல் வன்கொடுமை தடுக்கும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.



இது குறித்து பல்மருத்துவர் மற்றும் சமூக ஆர்வலர் திருமுருகன் சிம்ப்ளிசிட்டி செயலியில் நம்மிடம் பாகிந்து கொண்டபோது; குழந்தை பாலியல் வன்கொடுமை இந்தியாவில் வருடம் தோறும் அதிகரித்துக் கொண்டு வருகிறது. குழந்தைகள் மீது மெளன போர் அதாவது குழந்தைகள் இதை பற்றி பெற்றோர்களிடம் சொல்லாமலும், பெற்றோர்களும் இதை பற்றி ரிப்போர்ட் கொடுக்கவும் முன்வருவதில்லை. இதன் காரணமாகவே தற்கொலை முயற்சிக்கு பலர் ஆளாகின்றனர். ஊடகம் மூலமாகவும் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஒரு பெரிய தாக்கம் ஏற்படுத்த முடியும்.  இதை பற்றி செய்திகளை நான் சேகரித்து இதற்க்கு எதிராக கல்லூரி பருவத்தில் இருந்தே ஒரு விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்படுத்தனும் ஒரு முயற்சியில் இந்த விழிப்புணர்வு முகாம் தொடங்கினேன். இந்த விழிப்புணர்வு குறிப்பாக சமூக ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசுக்கு கொண்டு செல்வது என்னுடைய முக்கிய நோக்கம். இதற்கு தற்போது தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளிலும், பொது மக்களிடையும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். இதற்கு முதலில் மூன்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கல்வி பாடத்தில் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு புதிய திட்டம், 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு இதை பற்றிய விழிப்புணர்வு முகாம், குழந்தை பாலியல் வன்கொடுமை தடுக்க பெற்றோர்கள் 1098 அல்லது காவல்துறைக்கு ரிப்போர்ட் கொடுக்க முன்வர வேண்டும். 



பொதுவாக, இந்த குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு அரசு சார்பில் கடுமையான சட்ட திட்ட, நடவடிக்கைகள் மாற்ற வேண்டும். சைல்டு ஹெல்ப் லைன் 1098 என்ற பற்றிய விழிப்புணர்வு யாருக்கும் தெரிய வருவதில்லை. குழந்தை பாதுகாப்பிற்குகாக இந்த 1098 என்ற எண்ணிற்கு அரசு சார்பில் முழுமையான தகவல் கொடுக்கப்பட வேண்டும். அதுமட்டுமல்லாமல், 1098 பொதுமக்களுக்கு அதிக அளவில் தெரியும் வகையில் விழிப்புணர்வு கொண்டு வரவேண்டும். இதன் மூலம் குழந்தை பாலியல் வன்கொடுமை தடுப்பு மூலம் குழந்தைகளை பெருமளவில் பாதுகாக்கப்படலாம் என்றார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...