நீதித் துறையில் லஞ்சத்தை எதிர்த்து போராடி கைதானதற்காக மகிழ்ச்சி அடைகின்றேன்- ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன்



நீதித் துறையில் லஞ்சத்தை எதிர்த்து போராடி கைதானதற்காக மகிழ்ச்சி அடைகின்றேன் எனவும், இந்திய நீதித்துறையில் நான் தான் ஹீரோ எனவும் கைது செய்யப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் தெரவித்தார்.

கோவையை அடுத்த ஈச்சனாரி அருகே மாச்சேகவுண்டன் பாளையம் என்ற இடத்தில் தலைமறைவாக இருந்த நீதிபதி கர்ணன் செவ்வாயன்று இரவு மேற்கு வங்க போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை சென்னை அழைத்துச் செல்ல கோவை விமான நிலையத்திற்கு காவல் துறையினர் அழைத்து வந்தனர். கோவை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, நீதித்துறையில் லஞ்சம் இருக்கனும் என உச்ச நீதி மன்றம் சொல்கிறது. லஞ்சம் கூடாது என நான் சொல்கிறேன். இது தான் தன் மீதான வழக்கு. காவல் துறையினர் சட்டப்படி செயல்படுகின்றனர். அவர்கள் மீது எந்த புகாரும், குறைபாடும் இல்லை. என்னுடைய போராட்டம் தொடரும். நான் குற்றவாளியல்ல. நீதித்துறையில் நான் ஹீரோ. தேசமக்களுக்காகவும் தேச நலனுக்காகவும் நான் போராடுகிறேன். நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். 

நீதித்துறை அதிகாரம் தவறாக பயன்படுத்தப்பட்டு உள்ளது. உச்ச நீதிமன்றத்தை சேர்ந்த 8 நீதிபதிகளுக்கு தண்டனை விதித்து இருக்கிறேன். அவர்களுக்கு 5 ஆண்டு தண்டனை விதித்ததை ஏன் நடைமுறைப்படுத்தவில்லை.

தாழ்த்தப்பட்ட சமூக நீதபதியான தனது உத்தரவுகள் ஏன் அமல்படுத்தப்படவில்லை. உயர் வகுப்பு நீதிபதிகளின் உத்தரவுகள் மட்டும் அமல்படுத்தப்படுகின்றன. 

நீதித்துறையில் லஞ்சமும், சாதியமும் உள்ளது. நீதித் துறையில் லஞ்சத்தை எதிர்த்து போராடி கைதானதற்காக மகிழ்ச்சி அடைகின்றேன்" என்றார்.

முன்னதாக, பேட்டியின் போது காவல்துறையினர் சிலர் இடையூறு செய்த போது கோபமடைந்த நீதிபதி கர்ணன், நான் தீவிரவாதியல்ல எனவும் காவல் துறையினர் ஒதுங்கி நில்லுங்கள் எனவும் மக்களுக்கு செய்தியை சொல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதனையடுத்து விமானம் மூலம் நீதிபதி கர்ணன் சென்னை அழைத்துச் செல்லப்பட்டார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...