பவானி ஆற்றில் தற்காலிக மாசு கண்காணிப்பு அலகு அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும்

பவானி ஆற்றில் தற்காலிக மாசு கண்காணிப்பு அலகு அமைப்பதற்காக கோவை மாவட்ட நிர்வாகம் இரு பகுதிகளை தேர்வு செய்துள்ளது. 

தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திங்களன்று இதுகுறித்து கூறுகையில், பவானி ஆற்றில் நீர்இணைப்பு பகுதியின் முக்கிய இடத்தில் இரு பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு தற்காலிகமான மாசு கண்காணிப்பு அலக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார். 

மேலும், இந்த திட்டப் பணிக்காக ஒரு கோடி ரூபாயினை ஒதுக்கி பணிகளை துவங்கவும், அன்றாடம் பவானியில் மாசு காரணிகள் குறித்து கண்காணிக்கவும் தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கான ஆலையின் அமைப்பானது மாசுபாட்டை கண்காணிக்க உதவுகிறது. இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டத்தினை அதிகரிக்க வடிகால் திட்டம் சுமார் ரூ. 97 கோடியில் அமைக்கப்படவுள்ளது.

இப்பணிகளின் துவக்கத்தில், பவானி ஆற்றினை ஆதாரமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தொழில்நிறுவனங்களில் இருந்து நிதியை சேகரிக்க திட்டமிடப்பட்டது. இருப்பினும், தமிழக அரசே இந்த பணிகளுக்கான முழு செலவினையும் ஏற்றுக்கொண்ட நிலையில் தற்போது இன்று (செவ்வாயன்று) டெண்டர்கள் செயல்படுத்தப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, பவானி அற்றில் மாசு கண்காணிப்பு அமைக்கும் பணி விரைவில் துவங்கும் என மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையர் ஏ.அப்துல் ரசீத் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...