உணவு வங்கி கோயம்புத்தூர் சார்பில் "உலக பசி தினம்" முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி

2015-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உணவு வங்கி கோயம்புத்தூர் (புட் பேங்க் கோயம்புத்தூர்) நிறுவப்பட்டது. வறுமை ஒழிக்கப்பட்டு, பசியற்ற தேசத்தை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். 

இதனிடையே, வரும் மே 28ம் தேதி "உலக பசி தினத்தினை" முன்னிட்டு உணவு வங்கி கோயம்புத்தூர் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து உணவு வங்கி கோயம்புத்தூரின் வைஷ்னவி பாலாஜி நமது சிம்ப்ளிசிட்டி நிரூபரிடம் பகிர்ந்துகொண்டதாவது:-

கோவையில் புட் பேங்க் கோயம்புத்தூர் அமைப்பினை துவங்கும் போது எங்களிடம் 4 உறுப்பினர்களே இருந்தனர். தற்போது, நேரடியாக 200 உறுப்பினர்கள் இணைந்து உணவின்றி தவிக்கும் 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர். எங்களது முக்கிய குறிக்கோள் பசியற்ற தேசத்தை உருவாக்குவதே ஆகும். 

வரும் மே 28 ஆம் தேதி உலக பசி தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். அதன்படி 27ம் தேதியன்று கையெழுத்து பிரச்சாரம் நடத்தப்பட உள்ளது. இது சாதாரண கையொப்ப பிரச்சாரம் போல் இல்லாமல், மக்களின் மனதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட உள்ளது. மேலும், இந்நிகழ்வின் ஒரு பகுதியாக, புட் பேங்க் கோயம்புத்தூரின் உறுப்பினர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு ஆவணப்படத்தையும் திரையிட உள்ளோம்.

மேலும், உலக பசி தினமான 28ம் தேதியன்று குழந்தைகள் மூலம் மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும். இதன் மூலம் குழந்தைகளிடத்தில் சமூகத்தின் மீதான விழிப்புணர்வு அதிகரிக்கும். மேலும் அவர்கள் உணவின் முக்கியத்துவத்தையும், பசியை ஒழிப்பதற்கான வழிகளையும் கற்றுக்கொள்வார்கள். 

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியினைத் தொடர்ந்து, வஉசி பூங்காவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பசித்தோருக்கு உணவு வழங்கப்படும். இந்த விழிப்புணர்வு மற்றும் உணவு இயக்கத்தில் சேர விரும்பும் குழந்தைகள் உணவு வங்கி கோயம்புத்தூரில் தொடர்பு கொள்ளலாம். இது பசி இல்லாத தேசத்தை உருவாக்குவதற்கு எங்களது 160-வது முயற்சி ஆகும்" என்றார். 

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...