கோவையில் கத்திமுனையில் சமையல் மாஸ்டர், சாலையோர வியாபாரி, மெடிக்கல் பிரதிநிதியிடம் வழிப்பறி – மூவர் கைது

கோவையில் ஒரே நாளில் நடந்த மூன்று கத்திமுனை மிரட்டல் கொள்ளை சம்பவங்களில் போலீசார் மூவரை கைது செய்தனர். வடமதுரையில் மெடிக்கல் பிரதிநிதி சுரேந்திரனிடம் ரூ.1,000ஐ ஆட்டோ டிரைவர் கோபிநாத் பறித்தார். ரத்தினபுரியில் நொறுக்குத்தீனி வியாபாரி ஜெயக்குமாரிடம் ரூ.770ஐ ஆகாஷ் பறித்தார். புலியகுளத்தில் சமையல் மாஸ்டர் அஸ்ரப் அலியிடம் ரூ.330ஐ மோசஸ் பறித்தார். துடியலூர், ரத்தினபுரி, ரேஸ்கோர்ஸ் போலீசார் முறையே வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Coimbatore: கோவையில் ஒரே நாளில் நடந்த மூன்று தனித்தனி கத்திமுனை மிரட்டல் கொள்ளை சம்பவங்களில் போலீசார் மூவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

முதல் சம்பவத்தில், கே.வடமதுரை பழனிகவுண்டன்புதூர் பிரியங்கா நகரைச் சேர்ந்த மூர்த்தி மகன் சுரேந்திரன் (45) தனியார் நிறுவனத்தில் மெடிக்கல் ரெப்ரசென்டேட்டிவ் ஆக பணிபுரிந்து வருகிறார். அவர் பணி விஷயமாக வடமதுரை – பன்னிமடை சாலையில் மின்வாரிய அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தபோது, ஜி.என்.மில்ஸ் ஜல்லிக்கோரை பகுதியைச் சேர்ந்த நாகராஜ் மகன் ‘கோழி’ கோபிநாத் (36) என்பவர் ஆட்டோவில் வந்து அவரை வழிமறித்தார். ஜெயிலில் இருந்து வந்திருப்பதாகவும், சரக்கடிக்க பணம் வேண்டும் எனவும் கூறி மிரட்டிய கோபிநாத், சுரேந்திரன் பணம் இல்லை என்று மறுத்ததும் ஆத்திரம் அடைந்தார். கத்தியை காட்டி கழுத்தை அறுத்துவிடுவதாக மிரட்டிய அவர், சுரேந்திரனிடம் இருந்த ரூ.1,000 ரொக்கப் பணத்தை பறித்துக் கொண்டு தப்பினார். இதுகுறித்து சுரேந்திரன் துடியலூர் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்ததையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபிநாத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இரண்டாவது சம்பவத்தில், காந்திபுரம் ராஜ் நாயுடு லே-அவுட் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் மகன் ஜெயக்குமார் (44) ரத்தினபுரி அமரர் ஜீவானந்தம் சாலையில் உள்ள தேவி மொபைல் கடை அருகே தள்ளுவண்டியில் தின்பண்டங்கள் மற்றும் நொறுக்குத்தீனி வியாபாரம் செய்து வருகிறார். அவர் கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, சிவானந்தா காலனி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் மகன் ஆகாஷ் (23) என்பவர் அத்துமீறி கடைக்குள் நுழைந்து தகராறு செய்தார். தகாத வார்த்தைகளால் திட்டிய ஆகாஷ், இடுப்பில் செருகி வைத்திருந்த கத்தியை உருவி ஜெயக்குமாரை குத்தப் போவதாக மிரட்டி, கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.770 ரொக்கத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஜெயக்குமார் ரத்தினபுரி போலீசில் புகார் செய்ததையடுத்து, போலீசார் பதுங்கி இருந்த ஆகாஷை கைது செய்து பணத்தை மீட்டு, பின்னர் அவரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

மூன்றாவது சம்பவத்தில், தென்காசி மாவட்டம் நடுபட்டை தெருவைச் சேர்ந்த அஸ்ரப் அலி (47) கோவை புலியகுளம் பகுதியில் தங்கி சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். சமையல் வேலைகளை முடித்து ஊருக்குச் செல்ல பேருந்து ஏறுவதற்காக புலியகுளம் சுங்கம் சாவித்திரி சண்முகம் ரோடு டிரான்ஸ்பார்மர் அருகே நள்ளிரவு 11.30 மணியளவில் நடந்து சென்று கொண்டிருந்தார். ஆள் நடமாட்டம் இல்லாததை நோட்டமிட்டு வந்த அம்மன்குளம் கொண்டசாமி லே-அவுட் பொன்னம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த ஜான் ராபர்ட் மகன் மோசஸ் (29) என்பவர் அஸ்ரப் அலியை வழிமறித்தார். இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து நெஞ்சில் வைத்து மிரட்டிய மோசஸ், பணம் தராவிட்டால் குத்திக் கொன்றுவிடுவதாக மிரட்டி, அஸ்ரப் அலியிடம் இருந்த ரூ.330 ரொக்கப் பணத்தை பறித்துக் கொண்டு தப்பியோடினார். இதுகுறித்து அஸ்ரப் அலி ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்ததையடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து துரிதமாக செயல்பட்டு மோசஸை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

கோவையில் கத்திமுனையில் சமையல் மாஸ்டர், சாலையோர வியாபாரி, மெடிக்கல் பிரதிநிதியிடம் வழிப்பறி – மூவர் கைது

கோவையில் ஒரே நாளில் நடந்த மூன்று கத்திமுனை மிரட்டல் கொள்ளை சம்பவங்களில் போலீசார் மூவரை கைது செய்தனர். வடமதுரையில் மெடிக்...

கோவையில் அடுத்தடுத்து 2 பைக்குகள் திருட்டு: போலீசார் தீவிர விசாரணை

கோவை மாநகரப் பகுதியில் வீடுகளின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 பைக்குகள் அடுத்தடுத்து மர்ம நபர்களால் திருடு போயுள்ளன...

கோவை மேற்கு மண்டலத்தில் ரூ.11.87 கோடி வளர்ச்சிப் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் ரூ.11.87 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்தி...

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...