கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநிலை மற்றும் முனைவர் பட்ட மாணவர்களுக்கான தொடக்க மற்றும் அறிமுக நிகழ்ச்சியை MBA கருத்தரங்க அரங்கில் நடத்தியது. நிகழ்ச்சியில் கர்நாடக சங்கீத இசைக் கச்சேரி மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.


Coimbatore: கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலத்தின் சார்பில், 2026-2027ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநிலை முதலாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களுக்கான தொடக்க மற்றும் அறிமுக நிகழ்ச்சி 31.08.2026 அன்று MBA கருத்தரங்க அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியில் புல முதன்மையர் Dr. V. ஜனக மாயா தேவி வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து தலைவர் Dr. R. வசந்தகுமார் தொடக்கவுரையாற்றினார். துணைவேந்தர் Dr. S. ரவி மற்றும் பதிவாளர் Dr. B. V. பிரதீப் ஆகியோர் வாழ்த்துரையாற்றி புதிய மாணவர்களை ஊக்கப்படுத்தினார்கள்.

நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக இசைத்துறை முதுநிலை மாணவர்களின் கர்நாடக சங்கீத இசைக் கச்சேரி மற்றும் பரதத்துறை முதுநிலை மாணவர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்று பார்வையாளர்களை கவர்ந்தன. நிகழ்ச்சியின் இறுதியில் இசைத்துறைத் தலைவர் Dr. சஜிதா சுகு பி. நன்றியுரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Newsletter

FL2 Bar on Peelamedu-Vilankurichi Road Sealed Following Altercation Complaint

An FL2 liquor bar on Peelamedu-Vilankurichi Road in Coimbatore was sealed on September 8 following a police case over a...

விதிமீறல்: பீளமேடு மதுபானக் கூடத்திற்கு சீல் வைப்பு

கோவை பீளமேடு FL.2 மதுபானக் கூடத்தில் மோதல் சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து, உறுப்பினர் அல்லாதோருக்கு மது விற்பனை செய்ததாலும்...

வேளாண் இளங்கலைப் பட்டப்படிப்பு, டிப்ளமோ சேர்க்கை: துணைக் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்மைப் பிரிவின் 2026-27 பட்டப்படிப்பு மற்றும் பட்ட...

Coimbatore to Hold Rally on Settling Disputes Through Mediation

As part of the nationwide initiative, the District Mediation Centre will organise an awareness rally on September 9, to...

கல்வி, ஆராய்ச்சியில் நெறிமுறைகளில் சமரசம் கூடாது: பாரதியார் பல்கலை ஆசிரியர் தின விழாவில் வலியுறுத்தல்

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப ஆசிரியர்கள் தங்களைத் தகவமைத்துக் கொள்ளும் அதேவேளையில், கல்வித் தரம், ஆராய்ச்சி நேர்மை, ஒழு...

Teachers’ Day Celebration at Bharathiar University Highlights Role of Technology and Ethics

The evolving role of educators and the importance of ethics, research integrity and social responsibility in higher educ...