நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவசாய நடைமுறைகள், காலநிலை சவால்களுக்கு ஏற்ப தென்னை விவசாயத்தை மேற்கொள்வது உள்ளிட்டவை குறித்து இந்நிகழ்ச்சியில் எடுத்துரைக்கப்பட உள்ளது.
Coimbatore: உலக தென்னை தினம் 2026 நிகழ்ச்சி, கோவையில் வரும் செப்டம்பர் 2-ஆம் தேதி நடைபெற உள்ளது. தென்னை வளர்ச்சி வாரியம், வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகம், இந்திய அரசு, கோவை மண்டல அலுவலகம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஆகியவை இணைந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன.
“காலநிலை சவால்களைத் தாங்கவல்ல தென்னை: உணவு, ஆற்றல் மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்பை உறுதி செய்தல்” என்ற கருத்தை மையமாகக் கொண்டு இந்த ஆண்டு உலக தென்னை தினம் கடைபிடிக்கப்படுகிறது.
காலை 10 மணிக்கு, கோவை அண்ணா கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் தென்னை சாகுபடி, தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சவால்களுக்கு மத்தியில் தென்னைத் துறையைப் பாதுகாப்பது தொடர்பான கருத்துகள் இடம்பெற உள்ளன.
இந்நிகழ்ச்சியில் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் பவன் குமார் ஜி. கிரியப்பனவர், இ.ஆ.ப., தலைமை விருந்தினராகப் பங்கேற்க உள்ளார். மேலும், தென்னை வளர்ச்சி வாரியத்தின் இயக்குநர் இள. அரவாழி சிறப்புரையாற்ற உள்ளார்.
மேலும், வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள், பேராசிரியர்கள் மற்றும் தென்னைத் துறை சார்ந்த நிபுணர்கள் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளனர்.
தென்னை சாகுபடியில் எதிர்கொள்ளப்படும் சவால்கள், அதன் பல்வேறு பயன்பாடுகள் மற்றும் விவசாயிகளுக்கு கிடைக்கும் வாய்ப்புகள், சிறப்புரையாக தென்னை வளர்ச்சி வாரியத்தின் செயல்பாடுகள் மற்றும் தென்னைத் துறையின் எதிர்காலம் தொடர்பான கருத்துகள் பகிரப்பட உள்ளன.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, தென்னை சார்ந்த துறையில் சிறப்பாக செயல்படுவோருக்கான பாராட்டு மற்றும் சிறப்புப் பதிவுகளும் இடம்பெற உள்ளன. தொடர்ந்து மதிய உணவு மற்றும் தென்னை தொடர்பான செயல்பாடுகள் குறித்த நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.