பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு பணிகளை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா ஆய்வு செய்தனர். வெள்ளலூர் உரக்கிடங்கிலும் வடக்கு மண்டல குடிநீர் பகுதிகளிலும் கூடுதல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சியில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய்கள் இணைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை ஆய்வு செய்யும் வகையில் மேயர் K ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா ஆகியோர் கிழக்கு மண்டலம் விளாங்குறிச்சி சந்திப்பு பகுதியில் இன்று (12.08.2026) நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

கிழக்கு மண்டலம் வார்டு எண் 9-க்குட்பட்ட விளாங்குறிச்சி சந்திப்பு பகுதியில், பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய்கள் இணைப்பு பணிகளை மேயர் மற்றும் ஆணையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு சீரான முறையில் குடிநீர் விநியோகிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.



அதனைத் தொடர்ந்து மாநகராட்சி ஆணையாளர், தெற்கு மண்டலம் வார்டு எண் 99-க்குட்பட்ட வெள்ளலூர் உரக்கிடங்கு வளாகத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். புதிதாக அமைக்கப்பட்டுள்ள தானியங்கி வாகனத் தடுப்பு பகுதியில், அனுமதிக்கப்படும் வாகனங்களுக்கு QR SCANNER மூலம் அனுமதி வழங்கப்படுகிறதா என்பதை குறித்து நேரில் பரிசோதித்தார். மேலும் வெள்ளலூர் உரக்கிடங்கு வளாகப் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் நர்சரிக்கான பணிகளையும் ஆய்வு செய்து, விரைவாக பணிகளை முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



பின்னர் மாநகராட்சி ஆணையாளர், வடக்கு மண்டலம் வார்டு எண் 14-க்குட்பட்ட ஸ்ரீராம் நகர், சாய் நகர் மற்றும் விக்னேஷ்வரா நகர் ஆகிய பகுதிகளுக்கு சென்று குடிநீர் விநியோகம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். இப்பகுதிகளில் பில்லூர் குடிநீர் திட்டம் III-ன் கீழ் அமைக்கப்பட்டுள்ள குழாய் பகுதியில் குடிநீர் விநியோக அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில் BOOSTER PUMP அமைக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.



இந்த ஆய்வுகளின் போது, மாநகர தலைமைப் பொறியாளர் விஜயகுமார், வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல், துணை தலைமைப் பொறியாளர் எழில்(பொ), உதவி ஆணையர்கள் தட்சிணாமூர்த்தி, மகேஷ்கனகராஜ்(பொ), உதவி செயற்பொறியாளர்கள் இளங்கோவன்(பொ), கனகராஜ்(பொ), சத்தியமூர்த்தி(பொ), மாமன்ற உறுப்பினர்கள் நவீன்குமார், சித்ரா, மண்டல சுகாதார அலுவலர் ஆண்டியப்பன், உதவி பொறியாளர்கள் ஃபர்மான் அலி, சந்தீப்குமார், சுகாதார ஆய்வாளர்கள் ஜெரால்டு சத்யபுனிதன், பாலகுமார் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் பட்டன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Newsletter

Severe Traffic Congestion in Coimbatore’s Madukkarai Sparks Urgent Plea to Expedite Railway Overbridge Work

Severe traffic congestion in Madukkarai is causing hardship to residents and Kerala-bound commuters. Delayed railway ove...

கோவை மாநகராட்சி குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 86 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செப்டம்பர் 22, 2026 அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மேயர் ரங்...

கூடலூர் நகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு ஆய்வு; தனியார் நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் நகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏஇடியிஎஸ் கொசுக்களின் உற்பத்தி...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப். 24-ல் நேரடி மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தனியார் இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள இளமறிவியல் இடங்களை நிரப்ப நேரடி மாணவர...

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...