சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந்துள்ளது. விசாரணை அதிகாரியான சூலூர் இன்ஸ்பெக்டர் இன்று சாட்சியம் அளித்த நிலையில், மூடிய கதவுகளுக்குள் சாட்சிகள் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


கோவை: சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், விசாரணை அதிகாரியான சூலூர் காவல் ஆய்வாளர் இன்று கோவை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். மேலும், வழக்கில் தொடர்புடைய சாட்சிகளிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டம் சூலூரைச் சேர்ந்த 10 வயது சிறுமி, கடந்த மாதம் 21-ஆம் தேதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக, சிறுமியின் வீட்டருகே வசித்து வந்த கார்த்திக் மற்றும் அவரது கூட்டாளி மோகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில், சம்பவ இடம், சிறுமியின் சொந்த ஊர், உறவினர்கள், பிரேத பரிசோதனை அறிக்கை, தடயவியல் ஆய்வு அறிக்கை, தொலைத்தொடர்பு சாதனங்களின் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு 819 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை,கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் போக்சோ மற்றும் பாலியல் குற்றங்களுக்கான முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி பகவதி அம்மாள் முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டது.

மேலும், கைது செய்யப்பட்ட இருவரிடமும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. இந்த வழக்கில் மொத்தம் 104 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது வழக்கின் விசாரணை துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நேற்று முதல் சாட்சிகள் விசாரணை தொடங்கியது. சிறுமியின் தந்தை மற்றும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறை அதிகாரிகள்ஆகியோர் நேற்று நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தனர். நீதிமன்றக் கதவுகள் மூடப்பட்டு, ரகசியமான முறையில் சாட்சிகள் விசாரணை நடத்தப்பட்டது. சுமார் 5 மணி நேரம் நீடித்த இந்த விசாரணைக்குப் பிறகு, வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான சூலூர் காவல் ஆய்வாளர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். தொடர்ந்து மற்ற சாட்சிகளிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் சங்கர் ஆஜராகி வருகிறார்.

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கின் விசாரணை, நீதிமன்றக் கதவுகள் மூடப்பட்டு பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வளர்ச்சிப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் வளர்ச்சிப் பணிகளை ஆணையர் கட்டா ரவி தேஜா IAS நேரில் ஆய்வு செய்தார். காலை உணவு திட்ட சம...

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வளர்ச்சிப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் வளர்ச்சிப் பணிகளை ஆணையர் கட்டா ரவி தேஜா IAS நேரில் ஆய்வு செய்தார். காலை உணவு திட்ட சம...

கோவை கணேசபுரம் பள்ளி கட்டுமானத்தை மேயர் நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் கணேசபுரம் பகுதியில் ரூ.95 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மாநகராட்சி நடுநிலைப் பள...

கோவை பீளமேடு பகுதியில் மழைநீர் வடிகால், சாக்கடை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் ரூ.10 லட்சம் மழைநீர் வடிகால் பணி, சாக்கடை அடைப்பு சரிசெய்தல், குப்பை சேகரிப்பு, மரக்குப...

கோவை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கான வங்கிக் கடன் சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.15,000 வங்கிக் கடன் வழங்க ஆகஸ்ட் 24 முதல் 29 வரை பிரதான அலுவலகம் மற்றும்...

ஓணம் பண்டிகை: பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

ஓணம் பண்டிகையையொட்டி பயணிகளின் அதிகரித்த தேவையை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பெங்களூரு SMVT மற்றும் திருவனந்தபுரம் வட...