"தலைவா ஆணையிடு": அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில், கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்று குறிப்பிட்டு "தலைவா ஆணையிடு! அண்ணாமலை மகுடம் சூட" என்ற வாசகத்துடன் போஸ்டர்களை ஒட்டியுள்ளது பேசு பொருளாக மாறியுள்ளது.


கோவை: பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகியுள்ள சூழலில், கோவை நகரில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் ஒட்டப்பட்டுள்ள புதிய போஸ்டர்கள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

அண்ணாமலையின் எதிர்கால அரசியல் திட்டம் குறித்து பல்வேறு யூகங்கள் நிலவி வரும் சூழலில், சப்பீபத்தில், கோவையில் பல்வேறு வாசகங்கள் அடங்கிய அண்ணாமலை ஆதரவு போஸ்டர்கள் சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவி பரவலான கவனத்தை ஈர்த்து வருகின்றன.

அதன்படி,அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிய மறுநாள,நடிகர் ரஜினிகாந்தின் உருவப்படத்துடன், "தலைவா ஆணையிடு! அண்ணாமலை மகுடம் சூட…" என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள்,

கோவை மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் பெயர்கொண்டு ஒட்டப்பட்டுள்ளது பேசு பொருளாக மாறியுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களாகவே கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் அண்ணாமலையை மையப்படுத்திய போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தனிக்கட்சி தொடங்கக்கூடும் என்ற கருத்தை மறைமுகமாக சுட்டிக்காட்டும் வகையிலான இந்த போஸ்டர்கள், ரசிகர் மன்றங்கள் மற்றும் அரசியல் ஆதரவாளர்களால் ஒட்டப்பட்டு வந்துள்ளன. அந்த வரிசையில் தற்போது ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் ஒட்டப்பட்டுள்ள இந்த புதிய போஸ்டரும் இணைந்துள்ளதால், அரசியல் களம் மேலும் சூடுபிடித்துள்ளது.



ரஜினிகாந்த் தனது அரசியல் பயணத்தை 2017ஆம் ஆண்டு அறிவித்த பின்னர், 2021ஆம் ஆண்டு உடல்நலக் காரணங்களை முன்வைத்து அரசியலில் இருந்து விலகியதை நினைவுகூரத்தக்கது. அதன் பின்னர், அவரது ரசிகர் மன்றங்கள் பல்வேறு அரசியல் பிரமுகர்களுக்கு ஆதரவு தெரிவித்து வந்துள்ளன. இந்த சூழலில், அண்ணாமலைக்கு ஆதரவாக ரஜினி ரசிகர் மன்றம் போஸ்டர் ஒட்டியுள்ளது, தமிழ்நாடு அரசியலில் புதிய கூட்டணி சாத்தியங்கள் குறித்த ஊகங்களை வலுப்படுத்துகிறதா..? என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...