கணபதி பூங்காவில் புதிய மின்விளக்குகள் மற்றும் புனரமைக்கப்பட்ட கழிவறைகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 25இல் உள்ள கணபதி பூங்காவில் புதிய மின்விளக்குகள், புனரமைக்கப்பட்ட கழிவறைகள் மற்றும் சுய உதவிக்குழு மூலம் மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணிகளை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் சென்று ஆய்வு செய்தார். மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 25க்குட்பட்ட கணபதி மாநகர் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி பூங்காவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகள், புனரமைக்கப்பட்டுள்ள கழிவறைகள் மற்றும் பூங்கா பராமரிப்புப் பணிகளை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.








கமலி மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மூலம் பூங்கா பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மேயர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பூங்காவின் சுத்தம் மற்றும் பராமரிப்பு குறித்து அலுவலர்களுடன் கலந்துரையாடினார்.








இந்த ஆய்வில் மண்டல சுகாதார அலுவலர் முருகன், மாமன்ற உறுப்பினர் தவமணி பழனியப்பன், உதவி பொறியாளர் முத்துக்குமார், சுகாதார ஆய்வாளர் நவீன்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...