கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500 வரை கட்டாயமாக “டிப்ஸ்” கேட்பதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயாளிகளுக்காக வழங்கப்படும் இலவச வீல்சேர் சேவைக்கு சில ஊழியர்கள் கட்டாயமாக பணம், அதவாது “டிப்ஸ்” கேட்பதாக பயணிகள் தரப்பில் புகார் எழுந்துள்ளது.




கோவை சர்வதேச விமான நிலையத்தில் தினசரி சராசரியாக 31 முதல் 32 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கோடை விடுமுறை காலத்தில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கான விமான சேவைகளின் பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் இந்த விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.




பயணிகளின் வசதிக்காக விமான நிறுவனங்கள் சார்பில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் உடல்நலக்குறைவு உள்ளவர்கள் பயன்பெறும்படி வீல்சேர் சேவை முழுமையாக இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், இந்த சேவையை வழங்கும் சில ஊழியர்கள் குறிப்பிட்ட தொகையை கேட்டு பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.




இதுகுறித்து பயணிகள் கூறுகையில், "வீல்சேர் சேவை மிகவும் பயனுள்ளதாகவும், உதவிகரமாகவும் உள்ளது. ஆனால், சில ஊழியர்கள் 'இது இலவச சேவைதான், இருந்தாலும் ரூ.500 வரை டிப்ஸ் கொடுக்கலாம்' என்று தெரிவித்து மறைமுகமாக பணம் கேட்கின்றனர்.

பொதுவாக,பயணிகள் தங்கள் விருப்பத்துடன் உதவித்தொகை வழங்குவது வேறு விஷயம். ஆனால், இந்த சேவை குறித்து தெளிவாக தெரியாதவர்களிடம், குறிப்பாக வெளியூர் மற்றும் வெளிநாட்டு பயணிகளிடம் கட்டாயப்படுத்தி பணம் கேட்பது முற்றிலும் தவறானது," என்று கூறினர்.




மேலும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க விமான நிறுவன அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு தெளிவான வழிகாட்டுதல்கள் மற்றும் கண்டிப்பான அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




இதுகுறித்து, விமான நிலைய மற்றும் விமான நிறுவன அதிகாரிகள் கூறுகையில், "வீல்சேர் சேவை முழுமையாக இலவசம். இதற்காக எந்தவொரு பயணியிடமும் கட்டாயமாக பணம் கேட்பது முற்றிலும் தவறான செயல். யாரேனும் ஊழியர்கள் பணம் கேட்டால் அல்லது வற்புறுத்தினால், சம்பந்தப்பட்ட விமான நிறுவன அதிகாரிகளிடம் அல்லது விமான நிலைய மேலாண்மை அலுவலகத்தில் பயணிகள் உடனடியாக புகார் தெரிவிக்கலாம். இது தொடர்பாக புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்," என்று தெரிவித்தனர்.


Newsletter

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....