ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில் நடைபெற்றது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து 600 முன்னாள் மாணவர்கள் பங்கேற்று சாதனைகளை கொண்டாடி, தாய் நிறுவனத்துடனான உறவை வலுப்படுத்தினர்.


Coimbatore: ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி (SREC) முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு (Second Global Alumni Meet) கோவை அருகே உள்ள ஆனைக்கட்டியில் சிறப்பாக நடைபெற்றது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்வேறு ஆண்டுகளில் பட்டம் பெற்ற சுமார் 600 முன்னாள் மாணவர்கள் இந்நிகழ்வில் ஆர்வமுடன் பங்கேற்றனர். முன்னாள் மாணவர்கள் மீண்டும் ஒன்றிணைவதற்கும், அவர்களின் சாதனைகளை கொண்டாடுவதற்கும், தாய் கல்வி நிறுவனத்துடனான வாழ்நாள் உறவை மேலும் வலுப்படுத்துவதற்குமான சிறந்த தளமாக இந்நிகழ்வு அமைந்தது.

நிகழ்ச்சிக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவர் வீணா ரமேஷ் வரவேற்புரை வழங்கினார். நிகழ்ச்சிக்கு SNR சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் நரேந்திரன் தலைமை வகித்தார். அவர், ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி கடந்த ஆண்டுகளில் கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொழில்துறை இணைப்புகளில் பெற்றுள்ள குறிப்பிடத்தக்க வளர்ச்சி மற்றும் சாதனைகளை எடுத்துரைத்தார். கல்லூரி மற்றும் மாணவர்களின் உயர்த்துவதில் முன்னாள் மாணவர்கள் ஆற்றிவரும் பங்களிப்பையும் பாராட்டினார்.


ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முதல்வரும், முன்னாள் மாணவர் சங்கத்தின் புரவலருமான Dr. அ. சௌந்தரராஜன், SNR சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமார் மற்றும் TechGuard நிறுவனத்தின் வணிக மேம்பாடு மற்றும் கூட்டாண்மைத் துறைத் தலைவர் மார்க் மெலமேட் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக Spotlight என்ற முன்னாள் மாணவர் இதழ் வெளியிடப்பட்டது. இந்த இதழில் உலகம் முழுவதும் பணியாற்றி வரும் SREC முன்னாள் மாணவர்களின் சாதனைகள், வெற்றிக் கதைகள் மற்றும் இனிய நினைவுகள் இடம்பெற்றிருந்தன.


இதனைத் தொடர்ந்து நடைபெற்ற முன்னாள் மாணவர் உரையரங்கில், பல்வேறு ஆண்டுகளில் பட்டம் பெற்ற முன்னாள் மாணவர்கள் தங்களது தொழில்வாழ்க்கைப் பயணம், கல்லூரி கால அனுபவங்கள் மற்றும் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சியின் மற்றொரு சிறப்பம்சமாக, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R&D), கல்வி, தொழில்துறை ஒத்துழைப்பு, தொழில்முனைவோர் மேம்பாடு, மாணவர் வழிகாட்டுதல் மற்றும் கல்லூரி வளர்ச்சிக்கு சிறப்பான பங்களிப்பு செய்த முன்னாள் மாணவர்களுக்கு Alumni Excellence Awards வழங்கப்பட்டன.


நிகழ்ச்சியின் நிறைவாக, ஏற்பாட்டுக் குழுத் தலைவரான பேராசிரியர் Dr. வி. கற்பகம் நன்றியுரை வழங்கினார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...