அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்களை அரசாணைப்படி வைக்க வலியுறுத்தி மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரியார், அண்ணா மற்றும் டாக்டர் அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்களை அரசாணைப்படி வைக்க வேண்டும் என மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.



கடந்த நான்கு ஆண்டுகளாக பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து மனுவில் தெரிவித்த அவர்கள், தமிழக அரசின் பொதுத்துறை அரசாணை எண் 47 (07.01.1978) மற்றும் அதன் தொடர்ச்சியான 1990-ஆம் ஆண்டு அரசாணையின்படி, அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுக் கட்டிடங்களில் திராவிட இயக்கத் தலைவர்களான பெரியார், அண்ணா மற்றும் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்கள் இடம் பெற வேண்டும் என்பது விதிமுறையாக உள்ளது.

ஆனால், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதுவரை அந்தப் புகைப்படங்கள் வைக்கப்படவில்லை என மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் 12-ஆம் தேதி அப்போதைய மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரனிடம் நேரில் புகைப்படங்கள் வழங்கப்பட்டு மனு அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது “புரோட்டோகால் விதிமுறைகள் ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதி அளிக்கப்பட்டதாகவும், ஆனால் நான்கு ஆண்டுகள் கடந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், 2025 செப்டம்பர் மாதத்திலும் பலமுறை மனுக்கள் அளிக்கப்பட்டதுடன் மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டும் மாவட்ட நிர்வாகத்திடமிருந்து எந்த பதிலும் வரவில்லை எனவும் வேதனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் டாக்டர் அம்பேத்கர் புகைப்படங்கள் அரசு அலுவலகங்களில் முறையாக வைக்கப்பட்டுள்ளதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

“தமிழக வெற்றி கழகம் எந்த தலைவர்களை கொள்கைத் தலைவர்களாக அறிவித்ததோ, அவர்களது புகைப்படங்களை அரசு அலுவலகங்களில் வைக்க ஏற்கனவே அரசாணை உள்ளது” என மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் ஜோசப் விஜய், தனது கொள்கைத் தலைவர்களின் புகைப்படங்களை அரசாணைப்படி உடனடியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Newsletter

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...