பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளில் குவிந்து வருகின்றனர். சேர்க்கை விண்ணப்ப விநியோக பணிகள் இன்று முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


கோவை: தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், கோவையில் உள்ள முன்னணி கல்லூரிகளில் உயர் கல்விக்கான மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டத் தொடங்கியுள்ளன.



தேர்வு முடிவுகள் வெளியான சில மணி நேரங்களிலேயே, மாணவ - மாணவிகள் தங்களுக்கு விருப்பமான பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்வதற்காக கல்லூரிகளில் குவிந்தனர். குறிப்பாக தனியார் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் மற்றும் முன்பதிவு பணிகள் இன்று முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மாணவர்கள் தங்களது தற்காலிக மதிப்பெண் பட்டியலுடன் பெற்றோர்கள் மற்றும் நண்பர்களுடன் கல்லூரிகளுக்கு நேரில் வந்து, விருப்பமான பாடப்பிரிவுகளுக்கான சேர்க்கை தொடர்பான தகவல்களை அறிந்து பதிவு செய்து வருகின்றனர்.



குறிப்பாக பி.காம் (B.Com (http://b.com/)), பி.எஸ்சி ஐ.டி (B.Sc IT), கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் நவீன தொழில்நுட்ப பாடப்பிரிவுகளுக்கு மாணவர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது.

மேலும், மாணவர்களின் சந்தேகங்களுக்கு தீர்வு வழங்கும் வகையில் பல கல்லூரிகளில் பிரத்யேக உதவி மையங்கள் (Help Desk) அமைக்கப்பட்டுள்ளன. இதில், மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்களுக்கு ஏற்ப எந்தப் பாடப்பிரிவு அவர்களுக்கு ஏற்றது, எதிர்கால வேலைவாய்ப்பு வாய்ப்புகள் எப்படி இருக்கும் என்பது குறித்து கல்வி ஆலோசகர்கள் விளக்கமளித்து வருகின்றனர்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளில் குவிந்து வருகின்றனர்.

Newsletter

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....