கோவை மாவட்ட காவல் துறையின் மாதாந்திர குற்ற விவாதிப்புக் கூட்டம்: 100 காவலர்களுக்கு பாராட்டு

கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற விவாதிப்புக் கூட்டம் நடைபெற்றது. கடந்த மாத குற்றங்களை கையாண்ட 100 காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற விவாதிப்புக் கூட்டம் நேற்று (அக்டோபர் 15) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.கார்த்திகேயன் தலைமை வகித்தார்.

இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள கூடுதல் காவல் கண்காணிப்பாளர், காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகள் மற்றும் மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கும் சிறப்புப் பிரிவு காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கடந்த செப்டம்பர் மாதத்தில் நடந்த கொலை, கொள்ளை, திருட்டு மற்றும் போதைப் பொருள் விற்பனை போன்ற குற்றச் செயல்களில் தொடர்புடையவர்களை திறம்பட செயல்பட்டு கைது செய்த மற்றும் அவர்களுக்கு நீதிமன்றத்தில் தண்டனை பெற்றுத் தர சிறப்பாகப் பணியாற்றிய காவல் துறையினருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.



அவர்களை ஊக்குவிக்கும் வகையில் 13 காவல் ஆய்வாளர்கள், 29 உதவி ஆய்வாளர்கள், 6 சிறப்பு உதவி ஆய்வாளர்கள், 7 தலைமைக் காவலர்கள், 9 முதல் நிலைக் காவலர்கள், 36 காவலர்கள் என மொத்தம் 100 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.கார்த்திகேயன் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.

இந்த நிகழ்வில் பேசிய கே.கார்த்திகேயன், போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீதும், சட்டத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீதும் காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...