கோவை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டன. மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் இதனை துவக்கி வைத்தார்.


கோவை: கோவை சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டன. கோவை மாநகராட்சி நிர்வாகம் தனியார் நீட் பயிற்சி மையத்துடன் இணைந்து இந்த வகுப்புகளை நடத்த உள்ளது.



இந்நிகழ்வின் துவக்க விழாவில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், கோவை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், "வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். மாணவர்களின் வழக்கமான பள்ளி வகுப்புகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இவை திட்டமிடப்பட்டுள்ளன. கோவை மாநகராட்சியின் பல்வேறு பள்ளிகளில் இருந்து இந்த வகுப்பில் சேர விரும்பும் மாணவர்கள் இப்பள்ளிக்கு அழைத்து வரப்படுவார்கள். அவர்களின் போக்குவரத்து மற்றும் உணவு செலவுகளை மாநகராட்சியே ஏற்கும்," என்று தெரிவித்தார்.

மேலும், மழை நீர் வடிகால் பணிகள் குறித்தும் அவர் பேசினார். "கோவை மாநகராட்சியில் அவிநாசி மேம்பாலம், காளீஸ்வரர் மேம்பாலம் ஆகிய இரண்டு இடங்களில் தான் அதிகளவு மழை நீர் தேங்குகிறது. இந்த இடங்களிலும் நீரை வெளியேற்றி போக்குவரத்தை சீர் செய்துள்ளோம். இனி மழைநீர் தேங்காத வண்ணம் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன," என்றார்.

ஆவாரம்பாளையம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 30 பேர் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்களுக்கான உணவு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் கூறினார். மேலும், அவர்கள் இழந்த ஆவணங்கள் மற்றும் புத்தகங்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

"கோவை மாநகராட்சி முழுவதும் மழை நீர் தேங்காமல் இருக்க முழு வீச்சில் பணிகள் நடைபெற்று வருகின்றன," என்று ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் உறுதியளித்தார்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...