கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை உயர வாய்ப்பு: அக்டோபரில் தினமும் 10,000 பயணிகள், 30 விமானங்கள்

கோவை விமான நிலையத்தில் அக்டோபர் மாதம் தினசரி பயணிகள் எண்ணிக்கை 10,000 ஆகவும், விமானங்கள் எண்ணிக்கை 30 ஆகவும் அதிகரிக்க வாய்ப்பு. உள்நாடு மற்றும் வெளிநாட்டு பிரிவுகளில் சேவைகள் அதிகரிப்பதால் 4 ஆண்டுகளுக்கு பின் முன்னேற்றம்.


கோவை: கோவை விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பிரிவுகளில் சேவைகள் அதிகரிப்பதால், கரோனா நோய்தொற்று பரவலுக்கு பின் அக்டோபர் மாதம் தினசரி பயணிகள் எண்ணிக்கை 10 ஆயிரமாகவும், விமานங்கள் எண்ணிக்கை 30-ஆக அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோவை விமான நிலையத்தில் கடந்த 2020-ம் ஆண்டு கரோனா நோய்தொற்று பரவல் ஏற்படுவதற்கு முன் தினமும் 35 அல்லது 36 விமானங்கள் இயக்கப்பட்டன. தவிர தினமும் 10 ஆயிரம் பயணிகள் விமான நிலையத்தை பயன்படுத்தினர். தற்போது விமான சேவைகள் தொடர்ந்து விரிவுபடுத்தப்படுவதால் தினசரி இயக்கப்படும் விமானங்கள் எண்ணிக்கை செப்டம்பர் மாதத்தில் 27 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த மாதம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொங்கு குளோபல் போரம் (கேஜிஎப்) கூட்டமைப்பின் இயக்குநர் சதீஷ் கூறுகையில், "கோவை விமான நிலையத்தில் விமான சேவைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஹைதராபாத்துக்கு தினசரி மூன்று விமானங்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் கூடுதலாக ஒரு சேவை சேர்க்கப்பட்டுள்ளது. கோவை-கோவா இடையே ஏற்கெனவே வழங்கப்பட்டு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட சேவை அக்டோபரில் மீண்டும் தொடங்கப்படுகிறது," என்றார்.

மேலும் அவர், "கோவை-அபுதாபி இடையே வழங்கப்பட்டு வரும் சேவை குளிர்கால அட்டவணையிலும் சேர்க்கப்பட்டு சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. கோவை-சிங்கப்பூர் இடையே தற்போது வாரத்தில் அனைத்து நாட்களிலும் ஸ்கூட் நிறுவனம் சார்பில் விமான சேவை வழங்கப்பட்டு வரும் நிலையில், அக்டோபர் 27-ம் தேதி முதல் சிங்கப்பூருக்கு மேலும் ஒரு விமான சேவை தொடங்கப்படுகிறது," என்று தெரிவித்தார்.

விமான சேவைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அக்டோபர் மாதத்தில் தினசரி பயணிகள் எண்ணிக்கை 10 ஆயிரமாகவும், விமானங்கள் எண்ணிக்கை 30-ஆகவும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கரோனா நோய்தொற்று பரவலுக்கு பின் கோவை விமான நிலையத்தில் பழைய நிலை காண வாய்ப்பு உருவாகியுள்ளது.

நவம்பர் மாதத்தில் உள்நாட்டு பிரிவில் கோவையில் இருந்து டெல்லிக்கும், வெளிநாட்டு பிரிவில் இலங்கை மற்றும் கோலாலம்பூர் ஆகிய நாடுகளுக்கு விமான சேவைகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. "கோவை விமான நிலையம் சிறப்பான வளர்ச்சி பெற்று வருவது சுற்றுப்புற ஏழு மாவட்டங்களை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்," என்று சதீஷ் குறிப்பிட்டார்.

Newsletter

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...