கோவையில் கல்லூரி மாணவர்கள் தங்கும் இடங்களில் காவல்துறையினர் திடீர் சோதனை

கோவையில் கல்லூரி மாணவர்கள் தங்கும் இடங்களில் போதைப்பொருள் பயன்பாடு குறித்த புகார் அடிப்படையில் 60க்கும் மேற்பட்ட காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். பீளமேடு, சரவணம்பட்டி, ஈச்சனாரி பகுதிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.



கோவை: கோவை மாநகர காவல்துறையினருக்கு கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கும் பகுதிகளில் போதைப்பொருள் பயன்படுத்தி குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்தது.



இதனையடுத்து, கோவையில் உள்ள கல்லூரி மாணவர்கள் தங்கும் பல்வேறு இடங்களில் 60க்கும் மேற்பட்ட காவல்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.



இந்த சோதனையின் போது, கல்லூரி மாணவர்கள் தங்கும் இடங்களில் வேறு யாரேனும் தங்கி இருக்கிறார்களா, வேறு ஏதேனும் சட்டவிரோத பயன்பாட்டுப் பொருட்கள் உள்ளனவா என்பது குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.



இந்த அதிரடி சோதனையில் காவல் ஆய்வாளர்கள் கந்தசாமி, அருண், ராஜேஷ், முத்துலட்சுமி, தௌலத் நிஷா, பிரான்சிலின், சரவணன் மற்றும் உதவி ஆணையர் பார்த்திபன் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பங்கேற்றனர்.



பீளமேடு, சரவணம்பட்டி, ஈச்சனாரி போன்ற பல்வேறு பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கும் அறைகளில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு விவரங்களை சேகரித்து வருகின்றனர். இந்த திடீர் சோதனை நடவடிக்கை மாணவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...