தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தேனீ வளர்ப்பு பற்றிய ஒருநாள் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் 6, 2024 அன்று தேனீ வளர்ப்பு குறித்த ஒருநாள் பயிற்சி நடைபெறுகிறது. பயிற்சியில் தேனீ இனங்கள், வளர்ப்பு முறைகள், நோய் நிர்வாகம் போன்றவை கற்பிக்கப்படும்.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் தேனீ வளர்ப்பு பற்றிய ஒருநாள் பயிற்சி, செப்டம்பர் 2024 மாதத்திற்காக செப்டம்பர் 6 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயிற்சியில் தேனீ இனங்களை கண்டுபிடித்து வளர்த்தல், பெட்டிகளில் தேனீ வளர்க்கும் முறை மற்றும் நிர்வாகம், தேனீக்கு உணவு தரும் பயிர்கள் மற்றும் மகரந்த சேர்க்கை மூலம் மகசூல் அதிகரிக்கும் பயிர்களின் விவரம், தேனைப் பிரித்தெடுத்தல், தேனீக்களின் இயற்கை எதிரிகள் மற்றும் நோய் நிர்வாகம் போன்ற முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்படும்.

பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் பயிற்சி நாளன்று காலை 9.00 மணிக்கு பூச்சியியல் துறைக்கு நேரில் வந்து தங்களது அடையாள சான்றினை சமர்ப்பித்து, பயிற்சிக் கட்டணமாக ரூ.590/- (ஐநூற்று தொண்ணூறு ரூபாய் மட்டும்) செலுத்த வேண்டும். பயிற்சி காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும். பயிற்சியின் முடிவில் பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் பூச்சியியல் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண்: 0422-6611214, மின்னஞ்சல்: [email protected].

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...