கோவை மேற்கு மண்டலத்தில் மேயர் திடீர் ஆய்வு - பள்ளி கட்டுமானம் மற்றும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை பார்வையிட்டார்

கோவை மேற்கு மண்டலத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பள்ளி கட்டுமானம், மதிய உணவு தயாரிப்பு, பாதாள சாக்கடை திட்டப் பணிகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல பகுதிகளில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் இன்று (28.08.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேற்கு மண்டலம் வார்டு எண் 35க்குட்பட்ட இடையர்பாளையம் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாநகராட்சி கல்வி நிதியிலிருந்து ரூ.75.00 இலட்சம் மதிப்பீட்டில் 6 கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை மேயர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை விரைவாகவும், தரமாகவும் செய்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



மேலும், அப்பள்ளியில் தயாரிக்கப்படும் உணவுகள் சுகாதாரமான முறையில் தரமாக வழங்கப்படுகிறதா என்பதையும், உணவுப் பொருட்கள் இருப்புகள் மற்றும் பதிவேடுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பள்ளி மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார்.



அதனைத் தொடர்ந்து, வார்டு எண் 35க்குட்பட்ட புதிய நெசவாளர் காலனி, மூகாம்பிகை நகர் பகுதிகளில் நடைபெற்றுவரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மற்றும் சேதமடைந்துள்ள மழைநீர் வடிகால்களை மேயர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



இந்த ஆய்வுகளின் போது உதவி ஆணையர் சந்தியா, மாமன்ற உறுப்பினர் சம்பத், மண்டல சுகாதார அலுவலர் வீரன், உதவி பொறியாளர் ராஜேஸ்வேணுகோபால், சுகாதார ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...