கொலை மிரட்டல்: பாமக மாவட்ட செயலாளர் பாதுகாப்பு கோரி காவல் ஆணையரிடம் மனு

கோவையில் MyV3 Ads மோசடி குறித்து புகார் அளித்த பாமக மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி, தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறி, பாதுகாப்பு கோரி காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளார்.


Coimbatore: கோவை மாவட்ட பாமக செயலாளர் அசோக் ஸ்ரீநிதி, தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறி, பாதுகாப்பு வழங்க கோரி கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளார்.

அசோக் ஸ்ரீநிதி கூறுகையில், "கடந்த ஓராண்டு காலமாக 2000 கோடிகளுக்கு மேல் மோசடியில் ஈடுபட்ட MyV3 Ads நிறுவனத்திற்கு எதிராக புகார் அளித்து வருகிறோம். பொருளாதார குற்றப்பிரிவு விசாரணையில், MyV3 Ads நிறுவனம் 2451 கோடி முதலீடு பெற்று, ஒன்பதரை லட்சம் மக்களை ஏமாற்றியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் MyV3 Ads செயலி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது," என்றார்.



"ஆறு மாதத்திற்கு முன்பு எனக்கு கொலை மிரட்டல் வந்தது. இது குறித்து எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த ஜூலை 30ஆம் தேதி, கோவை அவிநாசி சாலையில், கூலிப்படையைச் சேர்ந்த மூன்று நபர்கள் என்னை கொலை செய்ய முயற்சித்தார்கள். அன்றே காவல்துறையில் புகார் அளித்தோம். ஆனால் இன்றுவரை யாரும் கைது செய்யப்படவில்லை," என்று அவர் தெரிவித்தார்.



"பாமக தலைவர் பாதுகாப்பு அளிக்க கோரி அறிக்கை விடுத்துள்ளார். எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் இது குறித்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மோசடி செய்பவர்களுக்கும், குண்டாஸ் நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கும், கூலிப்படையினருக்கும் பாதுகாப்பு அளிக்கிறார்கள்," என்று அசோக் ஸ்ரீநிதி குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு அளிக்க கோரி கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...