கோவை தொண்டாமுத்தூரில் யானையை விரட்டிய இளைஞர் உயிரிழப்பு

கோவை தொண்டாமுத்தூர் அருகே விராலியூரில் காட்டு யானையை விரட்டிய 24 வயது இளைஞர் யானையால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். வனத்துறையினரின் எச்சரிக்கையை மீறி செயல்பட்டதால் இந்த சோகம் நேர்ந்தது.


Coimbatore: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரை அடுத்த விராலியூர் குடியிருப்பு பகுதிக்குள் ஜூலை 28 அன்று இரவு சுமார் 10 மணியளவில் காட்டுயானை ஒன்று நுழைந்தது. உடனடியாக பூலாம்பட்டி வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் காட்டு யானையை வனப்பகுதிக்கு விரட்ட முயன்றனர். யானை ஆக்ரோஷமாக சுற்றித் திரிந்ததால், அதன் அருகே செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்தனர்.

எனினும், விராலியூர் இந்திரா காலனியைச் சேர்ந்த கார்த்தி (24) மற்றும் அவரது நண்பர் ஹரிஷ் (22) ஆகியோர் யானையை விரட்ட முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த யானை அவர்களை நோக்கி திரும்பியது. ஹரிஷ் தப்பி ஓடிவிட்டார். ஆனால் கார்த்தி கீழே விழுந்ததால், யானை அவரைத் தூக்கி வீசி மிதித்தது. இதில் கார்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஹரிஷும் படுகாயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வனத்துறையினரின் எச்சரிக்கையை மீறி யானையை விரட்டச் சென்றதால் நேர்ந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



இன்று (ஜூலை 29) சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். அவர் தனது சொந்த நிதியாக ரூ.20,000 மற்றும் தமிழக அரசின் முதல் கட்ட நிதியாக ரூ.50,000 வழங்கினார். இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...

LPF and Affiliated Unions Protest in Coimbatore Against Centre and State Governments’ Labour Policies

The Coimbatore District Labour Progressive Federation (LPF) Council and affiliated unions staged a protest near the Red...

EPFO Wage Ceiling Revision: Coimbatore Officials Explain Benefits for Formal Sector Employees

The Union Cabinet’s decision to raise the EPFO mandatory coverage wage ceiling from ₹15,000 to ₹25,000, effective Septem...

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 23, 2026 அன்று காலை 9 மணி ம...