பொள்ளாச்சியில் சாலை விபத்தில் நீதிபதி உயிரிழப்பு: CCTV காட்சிகள் வெளியீடு

பொள்ளாச்சி உடுமலை சாலையில் நீதிபதி கருணாநிதி மீது இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்த சம்பவத்தின் CCTV காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.


Coimbatore: பொள்ளாச்சி உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சின்னாம்பாளையம் பகுதியில் கடந்த திங்கட்கிழமை பிற்பகல் நடந்த சோகமான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சாலையைக் கடக்க முயன்ற நீலகிரி மாவட்ட நீதிமன்ற கூடுதல் நீதிபதி கருணாநிதி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நீதிபதி கருணாநிதி உயிரிழந்தார்.

விபத்தை ஏற்படுத்திய நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த கிழக்கு காவல் துறையினர், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.



விசாரணையின் முடிவில், விபத்தை ஏற்படுத்தி நிற்காமல் சென்ற கஞ்சம்பட்டி கே. நாகூரைச் சேர்ந்த வஞ்சிமுத்து என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் மீது அஜாக்கிரதையாக வாகனத்தை இயக்கி விபத்தை ஏற்படுத்தியதாக வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இக்காட்சிகளில், நீதிபதி கருணாநிதி சாலையைக் கடந்து வருவதும், வேகமாக வந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதுவதும், அவர் நிலைதடுமாறி கீழே விழுவதும் தெளிவாகத் தெரிகிறது. மேலும், விபத்தை ஏற்படுத்திய வஞ்சிமுத்து, தனது இருசக்கர வாகனம் மற்றும் செல்போனை எடுத்துக் கொண்டு தப்பிச் செல்லும் காட்சிகளும் பதிவாகியுள்ளன. இந்த நெஞ்சைப் பதறவைக்கும் CCTV காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Newsletter

அமராவதி-திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணை நீர்மட்டம் ஜூலை 23ஆம் தேதி 50.43 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்ட அண...

ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

கோவையில் ஆழியார் அணை 55.55 அடி, பரம்பிக்குளம் அணை 21.84 அடி, சோலையாறு அணை 75.19 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளன. தென்மேற்கு...

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...