ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், செய்தியாளர்களிடம் பேசியபோது அரசியல் கட்சிகள் ஒரு என்.ஆர்.ஐ.யின் பின்னால் செல்வது போல் தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை என்று தெரிவித்தார்.


திருப்பூர்: கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு ஒரு நாள் சுற்றுப்பயணமாக வந்திருந்த இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள புகழ்பெற்ற அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்தார். அவருடன் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களும் கலந்து கொண்டனர்.



துணை ஜனாதிபதியின் வருகையையொட்டி கோயில் வளாகம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கோயில் நிர்வாகத்தினர் அவருக்கு பாரம்பரிய முறைப்படி பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். தொடர்ந்து, பரிவட்டம் கட்டி கவுரவிக்கப்பட்ட அவர், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க நடத்திய சிறப்பு பூஜை மற்றும் அர்ச்சனையில் பங்கேற்று தரிசனம் செய்தார். பின்னர் கோயில் நினைவுப் பரிசுகள் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டன.



அதனைத் தொடர்ந்து கோயிலின் உள் பிரகாரங்கள் மற்றும் வளாகத்தை பார்வையிட்ட துணை ஜனாதிபதி, கோயிலின் வரலாறு குறித்து ஆளுநருக்கு விளக்கமளித்தார். பின்னர் அங்கு திரண்டிருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து நலம் விசாரித்தார். பொதுமக்கள் அவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்த, அவர் புன்னகையுடன் வாழ்த்து தெரிவித்து சிறிது நேரம் உரையாடினார். பின்னர் கோயிலுக்கு அருகிலுள்ள திருக்குளத்தையும் பார்வையிட்டார்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் மிகவும் சக்தி வாய்ந்த கோயில். சிறுவயதில் இந்தக் கோயிலுக்கு வந்தபோது இங்குள்ள குளத்தில் குளித்திருக்கிறேன். அப்போது குளத்தில் மூழ்கிய என்னை அங்கிருந்த பெரியவர் ஒருவர் காப்பாற்றினார் என்று தனது சிறுவயது நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.



தொடர்ந்து, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,இத்தனை அரசியல் கட்சித் தலைவர்கள் இருக்கும்போது, ஒரு என்.ஆர்.ஐ. திடீர் ஞானோதயம் வந்தது போல ஒரு கருத்தை கூறுகிறார். அவர் பின்னால் அனைத்து அரசியல் கட்சிகளும் செல்வது போல தோற்றம் ஏற்படுவது விந்தையாக உள்ளது. இதைப் பற்றி நான் அதிகம் சொல்ல விரும்பவில்லை.

அரசியல் கட்சித் தலைவர்கள் மக்களின் உணர்வுகளைப் புரிந்து அரசியலை முன்னின்று நடத்த வேண்டும். அந்த வகையில், ஒரு என்.ஆர்.ஐ.யின் பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்வாக இல்லை என்று தெரிவித்தார்.

Newsletter

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...

Elderly Woman Killed in Truck Collision near Velandipalayam in Coimbatore

A 70-year-old woman was killed after the scooter she was travelling on with her daughter was hit by a heavy truck on Tha...

Break-In: 100 Kg of Silver Stolen from House in Coimbatore’s Oppanakara Street

A major burglary has been reported at the residence of an auditor on Oppanakara Street in Coimbatore, where unidentified...