காங்கேயம் அருகே கார் விபத்து: அமைச்சர் உறவினர் பலி

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே பாப்பினி பகுதியில் கார் மரத்தில் மோதி கவிழ்ந்து விபத்து. அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் உறவினர் ஜெகன் பிரகதீஷ் (23) சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே நள்ளிரவில் நடந்த கார் விபத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் உறவினர் பரிதாபமாக உயிரிழந்தார்.

காங்கேயம் அருகே முத்தூரைச் சேர்ந்த முத்துசாமியின் மகன் ஜெகன் பிரகதீஷ் (23), கல்லூரி படிப்பை முடித்துவிட்டு தனது தந்தையின் அரிசி ஆலையை கவனித்து வந்தார். நள்ளிரவில் முத்தூரில் இருந்து காங்கேயம் நோக்கி கார் ஓட்டிச் சென்ற ஜெகன் பிரகதீஷ், பாப்பினி அருகே உள்ள வளைவில் திரும்ப முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானார்.



விபத்தில் படுகாயமடைந்த ஜெகன் பிரகதீஷை அப்பகுதி மக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து காங்கேயம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இறந்த ஜெகன் பிரகதீஷ், அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் அண்ணன் மகன் என்பதும், அவரது குடும்பத்தின் ஒரே மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Newsletter

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...