இரு சக்கர வாடகை வாகனத்திற்கு தடை விதிக்க வேண்டும் – கோவையில் தீரன் தொழிற்சங்க பேரவையினர் ஆர்ப்பாட்டம்

இருசக்கர வாகனத்தை வாடகைக்கு விடுவதால் ஆட்டோ, டாக்ஸி வாடகை வாகனங்களின் இயக்கம் குறைந்துள்ளது. இதனால் இரு சக்கர வாடகை வாகனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோவை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தீரன் தொழிற்சங்க பேரவை சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தீரன் தொழிற்சங்க பேரவை சார்பாக கோவை மாநகரில் இயங்கி வரும் இருசக்கர வாடகை வாகனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இருசக்கர வாகனத்தை வாடகைக்கு இயக்குவதால் பொதுமக்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு வருவதாகவும், இதனால் ஆட்டோ, டாக்ஸி வாடகை வாகனங்களின் இயக்கம் குறைந்துள்ளதாகவும், இரு சக்கர வாடகை வாகனத்தை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை முன் வைத்து அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.



தமிழக அரசு ஆட்டோ, கால் டாக்ஸி ஓட்டுநர் சங்க உறுப்பினர்களுக்கு மானிய விலையில் டீசல், பெட்ரோல் வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், சாலைகளை பராமரிக்கவும் அவிநாசி மேம்பாட்டு திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், சுங்க கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். மோட்டர் வாகன தொழிலாளர்களின் நலனை கருத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், வாடகை வாகன ஓட்டுநர்களுக்கான பணிகளை வரைமுறைபடுத்த வேண்டும் என்று தீரன் தொழிற்சங்க பேரவை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

Newsletter

விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்றவர் கைது - கோவை குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

அரசு வழங்கிய பட்டியலினருக்கான விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்து ஏமாற்றியதாக எழுந்த புகாரில், கவுண்டம்பாள...

கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளத...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...