கோவையில் TNPSC குரூப் 4 தேர்வில் 69,737 பேர் பங்கேற்பு

கோவையில் TNPSC குரூப் 4 தேர்வை 69,737 பேர் எழுதுகின்றனர். காலை 9:30 முதல் மதியம் 12:30 வரை நடைபெறும் இந்த தேர்விற்கு, 232 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


கோவை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 பதவிகளான கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், தனி உதவியாளர், கிளர்க், தனி செயலாளர், தொழிற்சாலை மூத்த உதவியாளர், ஆய்வக உதவியாளர் உட்பட 6,244 காலிப் பணியிடங்களை நிரப்ப கடந்த ஜனவரி மாதம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.



அதற்கு சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில் இன்று தமிழகம் முழுவதும் குரூப் 4 தேர்வு நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் நடைபெறும் குரூப் 4 தேர்வை 69 ஆயிரத்து 737 பேர் எழுதுகின்றனர். இதற்காக 232 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. தேர்வு காலை 9:30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறுகிறது.



இந்த நிலையில் கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள புனித மைக்கேல் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் செளரிபாளையம் பகுதியை சேர்ந்த கரோலினா என்ற பெண் அவரது ஆறு மாத கைக் குழந்தையுடன் தேர்வு எழுத வருகை புரிந்தார். தேர்வு துவங்கும் வரை குழந்தையை பார்த்துக்கொண்ட அவர் தேர்வு துவங்கியதும் குழந்தையை அவரது கணவரிடம் கொடுத்து விட்டு தேர்வு எழுத சென்றார்.



அதேசமயம் தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் வருகைபுரிய 9 மணி வரை அனுமதி என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சிலர் ஓரிரு நிமிடங்கள் தாமதமாக வந்தனர். அவர்களிடம் இவ்வாறு தாமதமாக வரக்கூடாது என்று கூறி அலுவலர்கள் அனுமதித்தனர். சிலர் மிகவும் தாமதமாக வந்த நிலையில் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...