லாட்டரி டிக்கெட் விற்பனையில் ஈடுபட்ட கும்பல் கோவையில் கைது - வங்கியில் இருந்த ரூ.18 லட்சம் முடக்கம்

வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள பட்டத்தரசி அம்மன் கோவில் அருகே காவல் துறையினர் நடத்திய சோதனையில் லாட்டரி டிக்கெட் விற்பனையில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 5 லேப்டாப், 9 செல்போன்கள், ரூ.1 லட்சத்து 61 ஆயிரம் பணம் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை, துடியலூரில் இருந்து சரவணம்பட்டி செல்லும் சாலையில் வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள பட்டத்தரசி அம்மன் கோவில் அருகே காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது அந்த வழியாக வந்த நான்கு சக்கர ஸ்கோடா வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்பொழுது அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள மாநிலத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான லாட்டரி டிக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து வாகனத்தில் வந்த நான்கு பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கோவையில் பல்வேறு இடங்களில் லாட்டரி டிக்கெட் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

அந்த வாகனத்தில் வைத்து இருந்த 5 மடிக்கணினிகள் (லேப்டாப்), 9 செல்போன்கள் மற்றும் ரூபாய் 1 லட்சத்து 61 ஆயிரம் பணம் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். வங்கிக்கணக்கில் இருந்த 18 லட்சம் ரூபாய் பணத்தையும் காவல்துறையினர் முடக்கியுள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் துடியலூர் அருகே உள்ள ஜி.என்.மில் பகுதியைச் சேர்ந்த வினோத் குமார், பிரதீப், நல்லாம்பாளையத்தைச் சேர்ந்த ஆதிஷ் கண்ணா மற்றும் வெள்ளக்கணறு பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பது தெரியவந்தது.

அதில் தலைமறைவான பிரபு என்பவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இவர்கள் அனைவரும் கோவையில் பல்வேறு வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் என்பது தெரியவந்து உள்ளது. அவர்கள் நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார்,நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி பின்னர் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....