கோவை KMCH மருத்துவமனையின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் - சுகாதாரத்துறையிடம் ரகுநாத் என்பவர் மனு..!

கேஎம்சிஎச் மருத்துவமனையை மூடி, மருத்துவமனையின் உரிமத்தை ரத்து செய் வேண்டும் என்று கோவை மாவட்ட சுகாதாரப்பணி மற்றும் குடும்ப நலத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் ரகுநாத் என்பவர் மனு அளித்துள்ளார்.


கோவை: கோவையில் உள்ள கேஎம்சிஎச் என்ற தனியார் மருத்துவமனையில், ராஜா என்பவர் மருத்துவமனை ஊழியர்களாலும், காவலர்களாலும் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொலை வழக்கில் மருத்துவமனை காவலர், நிர்வாகிகள் என 8 பேர் கைது செய்யப்பட்டு, நேற்று மே.29 கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், அரசு சார்ந்த மருத்துவத்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட மருத்துவமனை விசாரணை மேற்கொள்ள வேண்டுமெனவும், மேலும் மருத்துவமனையை மூட வேண்டுமெனவும் வலியுறுத்தி கோவை மாவட்ட சுகாதாரப்பணி மற்றும் குடும்ப நலத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் ரகுநாத் என்பவர் இன்று மே.30 மனு அளித்துள்ளார்.

இது குறித்து மனுதாரர் ரகுநாத் கூறுகையில், உயிரை காப்பாற்ற கூடிய இடத்தில் இருக்கும் மருத்துவமனையிலேயே இது போன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது ஏற்றுக்கொள்ள முடியாதது. இச்சம்பவத்தில் மருத்துவத்துறை சார்ந்து என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பிய அவர், துறை சார்ந்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், மருத்துவமனையின் உரிமத்தை ரத்து செய்வது மட்டுமல்லாமல் அந்த மருத்துவமனையை மூட வேண்டும் என்று தெரிவித்த அவர், இது போன்ற நிகழ்வுகள் ஒட்டுமொத்த தமிழகத்திற்கே தலைகுனிவு என்றார்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...