கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை - தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குநரிடம் மனு

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, எஸ்சி, எஸ்டி பிரிவினர் விண்ணப்பிக்கும்போது, எந்தவித விதிகளையும் கடைப்பிடிக்காமல் சோ்க்கை நடத்த வேண்டும் என்று கோவையைச் சோ்ந்த மாநில ஆதிதிராவிடா் நலக்குழு முன்னாள் உறுப்பினா் செல்வகுமார், உச்ச நீதிமன்ற வழக்குரைஞா் வெங்கடேசன், சமூக ஆா்வலா் எஸ்.சுபாஷ் ஆகியோர் சென்னையில் உள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் இயக்குநரிடம் மனு அளித்தனர்.


கோவை: இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் வாய்ப்பு மறுக்கப்பட்ட சமுதாயம் என்ற அடிப்படையில் எஸ்சி, எஸ்டியினருக்கு ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குநரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக கோவையைச் சோ்ந்த மாநில ஆதிதிராவிடா் நலக்குழு முன்னாள் உறுப்பினா் எஸ்.செல்வகுமார், உச்ச நீதிமன்ற வழக்குரைஞா் வெங்கடேசன், சமூக ஆா்வலா் எஸ்.சுபாஷ் ஆகியோர் சென்னையில் உள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் இயக்குநா் ரவிவா்மனிடம் நேற்று மே.24 மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது, குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-இன் கீழ் அனைத்து தனியார், சுயநிதி, சிறுபான்மையின பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவு வகுப்பில் 25 சதவீத இடம் ஒதுக்கப்பட வேண்டும். மேற்படி சட்டத்தின்படி வாய்ப்பு மறுக்கப்பட்ட சமுதாயம் என்ற அடிப்படையில் எஸ்சி, எஸ்டியினா் உள்ளனா்.

மேலும், தூய்மைப் பணியாளா்கள், ஆதரவற்ற விதவைகளின் குழந்தைகள் போன்றோரும் இந்த பிரிவில் அடங்குவா். இந்த சட்டத்தின்படி மேற்கண்ட பிரிவைச் சோ்ந்தவா்கள் விண்ணப்பிக்கும்போது, எந்தவித விதிகளையும் கடைப்பிடிக்காமல் சோ்க்கை நடத்த வேண்டும். ஆனால், பல பள்ளிகளில் சிறப்புப் பிரிவினருக்கு நேரடி சோ்க்கை நடத்தாமல், பொதுப்பிரிவில் அந்த இடங்களை வைத்துவிடுவதால் சிறப்புப் பிரிவினருக்கான சலுகை மறுக்கப்படுகிறது. இதனால் இந்த சட்டத்தின் நல்ல நோக்கம் நிறைவேற்றப்படாமலேயே உள்ளது. எனவே இது தொடா்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...