கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற்றார். 100க்கும் மேற்பட்ட கிராமங்களை தத்தெடுத்து மேம்படுத்தவும், போதையில்லா கோவை, பெண்கள் மேம்பாடு உள்ளிட்ட நல திட்டங்களை செயல்படுத்தவும் உறுதியளித்தார்.


Coimbatore: ரோட்டரி மாவட்டம் 3206-க்கு புதிய ஆளுநராக R.S. மாருதி பதவியேற்ற விழா கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி கூட்ட அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக குமரகுரு கல்வி குடும்பத் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர், சர்வதேச ரோட்டரி அமைப்பின் இயக்குனர் முருகானந்தம், மற்றும் நிர்வாகிகள் செல்லா ராகவேந்திரன், ராஜசேகர், சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய நிர்வாகத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

புதிய ஆளுநராக பொறுப்பேற்ற R.S. மாருதி அனைவரது மத்தியிலும் கூறுகையில், "மிகப்பெரிய சமுதாய சேவை அமைப்பான ரோட்டரியில் வரும் நாட்களில் கோவை மாவட்டத்திற்கு பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்த உள்ளோம். 100க்கும் மேற்பட்ட கிராமங்களை தத்தெடுத்து மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம். போதையில்லா கோவை, ஆரோக்கியமான சமுதாயம், பெண்கள் மேம்பாடு என பல்வேறு திட்டங்களை வரக்கூடிய நாட்களில் செயல்படுத்த உள்ளோம்" என்று தெரிவித்தார்.


மேலும் அவர் கூறுகையில், "இயற்கையை மேம்படுத்த ஒரு புதிய கட்டமைப்பை ரோட்டரி கட்டமைப்பாக உருவாக்க உள்ளது. சமுதாய மேம்பாட்டிற்கு அர்ப்பணிப்பு உணர்வோடு நாங்கள் சேவைகளை முன்னெடுக்க உள்ளோம். கோவை மாவட்டத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் நலனுக்கும் ரோட்டரி அமைப்பு தொடர்ந்து பங்களிக்கும்" என்று உறுதியளித்தார்.


பாரதிய வித்யா பவன் மற்றும் குமரகுரு கல்வி குழுமத்தின் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர் தனது உரையில், "சமுதாயத்திற்கு மிகப்பெரிய தேவை இது போன்ற ரோட்டரி அமைப்புகள். தங்களை அர்ப்பணித்து பல்வேறு சமூக பணிகளை முன்னெடுக்க உள்ள ஆளுநர் மாருதி உள்ளிட்ட நிர்வாகிகளை பாராட்டுவோம். இவர்களின் சேவை மனப்பான்மை சமுதாயத்திற்கு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை" என்று கூறினார்.


விழாவில் பல்வேறு ரோட்டரி அமைப்புகளின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்று புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். ரோட்டரி மாவட்டம் 3206 கோவை மாவட்டத்தில் பல்வேறு சமூக நல திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. புதிய ஆளுநர் மாருதியின் தலைமையில் இந்த சேவைகள் மேலும் விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...