பொள்ளாச்சி அருகே உள்ள பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலை சூழ்ந்த வெள்ளம் - பக்தர்கள் செல்ல தடை

மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த மழையால், பொள்ளாச்சி அடுத்த பாலாற்றின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலை காட்டாற்று வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் வழிபாடு செய்ய பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.


கோவை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடைமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மாலை முதல் நள்ளிரவு வரை கனமழை பெய்தது. இதன் காரணமாக கவியருவி உள்பட பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்த நிலையில் பொள்ளாச்சி அடுத்த பாலாற்றின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயில் வழியாக பாலாறு, உப்பாறு மற்றும் சிற்றார்கள் ஓடைகளில் இருந்து வரும் தண்ணீர் கடந்து செல்கிறது.

நேற்று பெய்த கனமழையின் காரணமாக இப்பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலை காட்டாற்று வெள்ளம் சூழ்ந்தது. இதனையடுத்து வழிபாடு செய்ய பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாககோவில் நிர்வாகம் இன்று மே.22 தெரிவித்துள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...