கோடை விழா தொடங்குவதை முன்னிட்டு கோவையில் இருந்து ஊட்டிக்கு 25 சிறப்பு பஸ்கள் நாளை முதல் இயக்கம்

ஊட்டியில் மலர் கண்காட்சி தொடங்க உள்ளதால், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். பஸ்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக நாளை (மே.4) முதல் கோவையில் இருந்து கூடுதலாக 25 சிறப்பு பஸ்களை இயக்க உள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.


கோவை: நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஆண்டுதோறும் கோடைவிழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கோடை விழா வருகிற 10-ந் தேதி ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியுடன் தொடங்குகிறது. 10-ந் தேதி தொடங்கும் மலர் கண்காட்சி 20-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்க உள்ளது.

மலர் கண்காட்சியை கண்டு ரசிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவார்கள். சுற்றுலா பயணிகள் தங்களது சொந்த மற்றும் வாடகை வாகனங்கள் மற்றும் அரசு பஸ்களிலும் பயணித்து ஊட்டிக்கு வருகின்றனர். ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் கோவைக்கு வந்தே ஊட்டிக்கு செல்கின்றனர்.

இந்த நிலையில் வருகிற 7-ந்தேதி முதல் ஜூன் 30-ந் தேதி வரை நீலகிரிக்கு வருவோர் இ-பாஸ் பெற்றே செல்ல ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதனால் ஊட்டிக்கு வரும் பலர் தங்களது சொந்த வாகனங்களை தவிர்த்து அரசு பஸ்களில் பயணிக்க வாய்ப்புள்ளது. பஸ்களிலும் கூட்ட நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதனை கருத்தில் கொண்டு, கோடை சீசனையொட்டி கோவையில் இருந்து நாளை (மே.4) முதல் 25 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது, கோவையில் இருந்து ஊட்டி மற்றும் கூடலூர் வரை அரசு பஸ்களின் புறப்பாடு 80 ஆக உள்ளது.

தற்போது ஊட்டியில் மலர் கண்காட்சி தொடங்க உள்ளதால், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். பஸ்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக நாளை (மே.4) முதல் கோவையில் இருந்து கூடுதலாக 25 சிறப்பு பஸ்களை இயக்க உள்ளோம். எனவே சுற்றுலா பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்த்து, அரசு பஸ்களில் பயணித்து கோடை விழாவை காண நீலகிரிக்கு செல்லலாம் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் ரூ.241 கோடி வளர்ச்சித் திட்டப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆய்வு

கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி.ப.ராஜ்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா ஆகியோர் வடக்கு மற்றும்...

அமராவதி அணையில் நீர்மட்டம் 45.8 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 32.95 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 8ஆம் தேதி நிலவரப்படி 45.8 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: தொடர் நீர் வெளியேற்றம்

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஆழி...

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...