மாநில எல்லையில் மட்டும் வாகன சோதனை - தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு விளக்கம்

கடந்த 2019 தேர்தலில் இரவு 7:00 மணிக்கு 69 சதவீத ஓட்டுகள் பதிவானதாவும், நேற்று நடைபெற்ற தேர்தலில் 72.09 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.


கோவை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு கூறியதாவது, மாநிலம் முழுதும் இரவு 7:00 வரை 72.09 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன. இதில், தபால் ஓட்டுகள் சேர்க்கப்படவில்லை. ஓட்டுச்சாவடியில் பதிவான 2 ஓட்டுகள் விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 தேர்தலில் இரவு 7:00 மணிக்கு 69 சதவீத ஓட்டுகள் பதிவாகின.

நேற்று வெயில் அதிகம் இருந்ததால் மாலை 3:00 மணிக்கு மேல் ஏராள மானோர் ஓட்டளித்தனர். மாலை 6:00 மணிக்கு உள்ளாக ஓட்டளிக்க வந்தவர்களுக்கு, டோக்கன் கொடுத்து ஓட்டு போட அனுமதிக்கப்பட்டனர்.

ஓட்டுப்பதிவு முடிந்து விட்டதால், பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு நிறைய இடத்தில் மாற்றப்படும். தேர்தல் கமிஷன் அறிவுரையின்படி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் தேர்தல் நடக்கும் வரை, எல்லை பகுதியில் தேவைக்கேற்ப பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு செயல்படும், மற்ற பகுதிகளில் செயல்படாது.

எல்லை பகுதியில், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்து சென்றால் பறிமுதல் செய்யப்படும். ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர்கள், தேர்தல் பார்வையாளர்கள், கட்சியினர் அறிக்கை அடிப்படையில், மறுஓட்டுப்பதிவு தேவையென்றால் நடத்தப்படும். தேர்தல் மிகவும் சுமுகமாக, சட்டம் ஒழுங்கு பிரச்னை இல்லாமல் நடந்து முடிந்துள்ளது. ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சிறப்பாக செயல்பட்டன.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...

கோவையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட புகைப்படக் கலைஞர் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; திட்டமிட்டு கொலை செய்ததாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவரை...