தாராபுரத்தில் பிறந்தநாளுக்காக வைக்கப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பேனர் கிழிப்பு

அண்ணா சிலை பகுதியில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.தனசேகரனின் ஆதரவாளர்கள் அனுமதி இன்றி ஃபிளக்ஸ் பேனர் வைத்திருந்தார். பேனரில் முதலமைச்சரின் உருவப்படத்தையும், அதில் இருந்த ஆதரவாளர்கள் புகைப்படத்தையும் மர்ம நபர்கள் கிழித்து விட்டு சென்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க‌.ஸ்டாலின் பிளக்ஸ் பேனர் அண்ணா சிலை அருகே பழைய நகராட்சி அலுவலகம் முன்பு வைக்கப்பட்டு இருந்த பிளக்ஸ் பேனர் கிழிக்கப்பட்டிருந்தது சம்பவம் திமுக கட்சி நிர்வாகிகளிடம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 71, ஆவது பிறந்தநாள் விழா நேற்று திமுக நகரச் செயலாளர் முருகானந்தன் தலைமையில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி முன்னிலையில் அண்ணா சிலை பகுதியில் நேற்று மாலை 71 கிலோ கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் அதே பகுதியில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கே.எஸ். தனசேகரனின் ஆதரவாளர்கள் அனுமதி இன்றி ஃபிளக்ஸ் பேனர் வைத்திருந்தார்.



இந்நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் கே.எஸ்.தனசேகர் ஆதரவாளர்கள் வைத்திருந்த பிளக்ஸ் பேனரில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உருவப்படத்தையும், அதில் இருந்த ஆதரவாளர்கள் புகைப்படம் அடங்கிய பேனரையும் கிழித்து விட்டு சென்றனர்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் நிர்வாகிகளின் உட்கட்சி பூசல் அக்கட்சி தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.



இந்த நிலையில் திமுக நகர துணை செயலாளர் கமலக்கண்ணன் தலைமையில் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் துணை கண்காணிப்பாளர் கலையரசனிடம் பேனர் கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி 50,க்கு மேற்பட்ட திமுகவினர் மனு கொடுத்தனர். இதனால் தாராபுரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தாராபுரம் முன்னாள் நகர செயலாளரும், தற்போதைய தலைமை செயற்குழு உறுப்பினருமான கே.எஸ்.தனசேகர் ஒரு அணியினராகவும், தற்போதைய தாராபுரம் நகர செயலாளராக இருந்து வரும் முருகானந்தம் மற்றொரு அணியாகவும். இருந்து வருகின்றனர்.

இவர்கள் இருவரும் தனித்தனியாக ஆதரவாளர்களை சேர்த்துக்கொண்டு கடந்த 7 மாத காலமாக கருத்து வேறுபாடுடன் கட்சிப் பணிகள் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....