கோவை-திருவனந்தபுரம் வந்தே பாரத் ரயிலை இயக்க டெல்லியில் மத்திய அமைச்சரிடம் வானதி சீனிவாசன் கோரிக்கை

கோவை - திருவனந்தபுரம் இடையே வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும், கோவை - பெங்களூர் இடையேயான வந்தே பாரத் ரயில் அதிகாலை 5 மணிக்கு புறப்படுவது பயணிகளுக்கு உகந்ததாக இல்லை. எனவே, கோவையிலிருந்து காலை 6 மணிக்குப் பிறகு புறப்படும் வகையில் பயண நேரத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சரிடம் வானதி சீனிவாசன் கோரிக்கை வைத்தார்.


கோவை: கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், கோவை உள்ளிட்ட கொங்கு மண்டல மக்களின் ரயில்வே துறை தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய மனுவை டெல்லியில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்து அளித்தார்.

மனுவை பொறுமையாக படித்துப் பார்த்த அமைச்சர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மத்திய ரயில்வே அமைச்சரிடம் முன்வைத்த முக்கியமான கோரிக்கைகள்: கோவை - திருவனந்தபுரம் இடையே வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும். கோவை - பெங்களூர் இடையேயான வந்தே பாரத் ரயில் அதிகாலை 5 மணிக்கு புறப்படுவது பயணிகளுக்கு உகந்ததாக இல்லை. எனவே, கோவையிலிருந்து காலை 6 மணிக்குப் பிறகு புறப்படும் வகையில் பயண நேரத்தை மாற்றியமைக்க வேண்டும். கோவையிலிருந்து தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு ஐந்து ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் அளித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....