கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு குறிஞ்சேரி ஊராட்சியில் முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு முகாம்

குடும்ப அட்டை, வருமானச் சான்றிதழ், குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல்கள், மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான ஆவணம் உள்ளிட்டவற்றை கொடுத்து முதல்மைச்சரின் மருத்துவ காப்பீட்டு முகாமில் பொதுமக்கள் பதிவு செய்து கொண்டனர்.


திருப்பூர்: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த குறிஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு முகாம் நடைபெற்றது.



அப்போது பொதுமக்கள் குடும்ப அட்டை, வருமானச் சான்றிதழ், குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல்கள், மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான ஆவணம் உள்ளிட்டவற்றை கொடுத்து பதிவு செய்து கொண்டனர்.



இந்த முகாமில் புதிதாக காப்பீட்டு அட்டை பதிவு செய்பவர்கள், ஏற்கனவே உள்ள மருத்துவ காப்பீட்டு அட்டை புதுப்பித்து கொடுத்தல், காப்பிட்டு அட்டை தவறவிட்டவர்கள், புதிய அட்டை பெறுதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றது.



இந்த முகாமில் வருவாய்துறை மூலம் வருமானச் சான்றிதழ் உடனடியாக வழங்கப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். முகாமில் ஒன்றிய குழு தலைவர் மகாலட்சுமி முருகன், உடுமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே.எம்.தங்கராஜ் என்ற மெய்ஞானமூர்த்தி உட்பட ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...

கோவையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட புகைப்படக் கலைஞர் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; திட்டமிட்டு கொலை செய்ததாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவரை...

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...