பொள்ளாச்சியில் உள்ள மகாலிங்கம் கல்லூரியில் தமிழிசை சங்கம் சார்பில் ரஷ்யா நடன கலைஞர்களின் கலாச்சார நடனம் அரங்கேற்றம்

ரஷ்யா நாட்டை சேர்ந்த 19 நடன கலைஞர்கள் கலந்து கொண்டு அந்நாட்டில் கைத்தறி நெசவு செய்யும் முறை, நெல் நடவு செய்யும் முறை, உள்ளிட்ட பாரம்பரிய தொழில் முறைகளை இந்திய மக்கள் தெரிந்து கொள்ளும் வகையிலும் பல்வேறு விதமான நடனங்களை ஆடி அசத்தினர்.


கோவை: பொள்ளாச்சி தமிழிசைச் சங்கம் சார்பில் கடந்த 50 ஆண்டுகளாக பாரம்பரிய நடன கலைகள் மற்றும் இசை கலைஞர்களை ஊக்குவித்தும் விதமாக பல்வேறு அரங்கேற்றங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. முதல் முறையாக பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள மகாலிங்கம் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் தமிழிசை சங்கம் சார்பில் ரஷ்யா நடன கலைஞர்கள் பங்கு பெற்ற கலாச்சார நடன அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் ரஷ்யா நாட்டை சேர்ந்த 19 நடன கலைஞர்கள் கலந்து கொண்டு அந்நாட்டில் கைத்தறி நெசவு செய்யும் முறை, நெல் நடவு செய்யும் முறை, உள்ளிட்ட பாரம்பரிய தொழில் முறைகளை வெளிப்படுத்தும் விதமாகவும், அந்நாட்டு கலாச்சாரம், இலக்கியங்களை இந்திய மக்கள் தெரிந்து கொள்ளும் வகையிலும் பல்வேறு விதமான நடனங்களை ஆடி அசத்தினர்.

இதை ஆயிரகணக்கான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் ஆகியோர் கைகளைத் தட்டி ஆரவாரத்துடன் கண்டு ரசித்தனர். கடந்த 60 ஆண்டுகளாக ரஷ்யா-இந்தியா நட்பு நாடாக திகழ்ந்து வருகிறது. தொடர்ந்து இரு நாடுகளின் உறவுகளை மேம்படுத்தவும், இந்திய ரஷ்யா இரு நாடுகளுக்கு இடையே கலாச்சார பரிமாற்றத்திற்கு ஆண்டுதோறும் இந்திய கலைக்குழு ரஷ்யாவுக்கு செல்வதும், ரஷ்யா கலைக்குழு இந்தியாவிற்கும் வருவது வழக்கம். இதன் மூலம் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே கலாச்சார பரிவர்த்தனை மேம்பட்டு வருவதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தங்கப்பன் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...