வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்முனைவோர் முகாம் துவக்க விழா

தமிழ்நாட்டில் உள்ள ஒரே நோடல் மையமான ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இந்தியாவில் உள்ள 10 மையங்களில் ஒன்றாகும். இந்த முகாம் நேற்று( ஜனவரி 29ம் தேதி) தொடங்கி, பிப்ரவரி 2ம் தேதி வரை நடக்கிறது. இதில், ஜம்மு காஷ்மீர், லடாக் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள பகுதிகளில் இருந்து 300 மாணவர்கள் முகாமில் பங்கேற்கின்றனர்.


கோவை: கோவை துடியலூரை அடுத்த வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 5 நாட்கள் நடைபெறும் புதுமை கண்டுபிடிப்பு, வடிவமைப்பு மற்றும் தொழில்முனைவோர் முகாம் துவக்க விழா நடைபெற்றது.



விழாவில் கல்லூரியின் துணை முதல்வர் ப.கருப்புசாமி அனைவரையும் வரவேற்றார். முதல்வர் முனைவர் N.R.அலமேலு தலைமை தாங்கி பேசினார். ஏ.ஐ.சி.டி.இ.யின் தலைவர் பேராசிரியர். டி.ஜி. சீத்தாராம், ஏஐசிடிஇ தலைமையகம், புது தில்லியில் இருந்து மெய்நிகர் முறையில் துவக்கி வைக்கப்பட்டு நிகழ்வுகள் அனைத்தும் சமூக ஊடக தளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

கல்வி அமைச்சகம், அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) மற்றும் கல்வி அமைச்சகத்தின் புத்தாக்கப் பிரிவு (எம்ஐசி) ஆகியவை மிகவும் எதிர்பார்க்கப்படும் “புதுமை கண்டுபிடிப்பு, வடிவமைப்பு மற்றும் தொழில்முனைவோர் (ஐடிஇ) பூட்கேம்ப்களை (முகாம் - இரண்டாவது கட்டம் ) இந்தியாவில் உள்ள பல்வேறு பகுதிகளின் பத்து மையங்களில் தொடங்குகின்றன.

தமிழ்நாட்டில் உள்ள ஒரே நோடல் மையமான ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, இந்தியாவில் உள்ள 10 மையங்களில் ஒன்றாகும். இந்த முகாம் நேற்று ( ஜனவரி 29ம் தேதி) தொடங்கி, பிப்ரவரி 2ம் தேதி வரை நடக்கிறது. ஜம்மு காஷ்மீர், லடாக் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள பகுதிகளில் இருந்து 300 மாணவர்கள் முகாமில் பங்கேற்கின்றனர்.

சிறப்பு விருந்தினராக வோல்வோ குழுமத்தின் புதுமை கண்டுபிடிப்புகளின் ஆலோசகர் அர்ஜுன் மற்றும் கௌரவ விருந்தினராக இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் புதிய கண்டுபிடிப்பு துறை நிர்வாக ஆசிரியர், விகாஸ் வர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்..

அவர் பேசும் போது, இந்த தனித்துவமான முயற்சி, மாணவர் கண்டுபிடிப்பாளர்களின் புத்தாக்கம், வடிவமைப்பு மற்றும் தொழில் முனைவோர் திறன்களை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது இது. பங்கேற்பாளர்களுக்கு தயாரிப்பு வடிவமைப்பு, பணிச்சூழலியல் வடிவமைப்பு, சிந்தனை மற்றும் பிட்ச்சிங் திறன் ஆகியவற்றில் பயிற்சியளிக்கும்.

பங்கேற்பாளர்கள் பல்வேறு தயாரிப்பு வடிவமைப்பு முறைகளை ஆராய்வதற்கும், வடிவமைப்பு சிந்தனைக் கருத்துகளை வளர்ப்பதற்கும் மற்றும் விலைமதிப்பற்ற அனுபவத்தைப் பெறுவதற்கும் வாய்ப்பைப் பெறுவார்கள் என முகாமின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

தொழில்முனைவோர் கல்விக்கான ஆதரவிற்காக புகழ்பெற்ற வாத்வானி அறக்கட்டளையுடன் இணைந்து இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டத்தில் தேசிய மற்றும் சர்வதேச புகழ்பெற்ற சில பேச்சாளர்கள் மற்றும் வடிவமைப்பு நிபுணர்கள் பயிற்சி அமர்வுகளை வழங்குவார்கள்.

முகாம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை இந்நிறுவனத்தின் புத்தாக்க மையத்தைச் சேர்ந்த ரதி, நரேந்திரன், சாந்தினி மற்றும் டாக்டர் ரவீன் ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...